YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 68 OF 100

ஆண்டவருக்கு சித்தமானால்

தானும் தன் மனைவியும் ஆப்பிரிக்காவிலுள்ள சாட் என்ற இடத்திற்கு மிஷினரிகளாக போவதாக என் நண்பர் கூறினார். எப்பொழுது திரும்பி வருவீர்கள் என்று கேட்டதற்கு, “கர்த்தருக்கு சித்தமானால்,” நாங்கள் ஜனவரி மாதம் திரும்பி வர திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

மேலும், அவர் தன்னுடைய ஆப்பிரிக்க சுவிசேஷ ஊழியத்தின் காரியங் களை என்னோடு பேசும்போது; அடிக்கடி “ஆண்டவருக்கு சித்தமானால்” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அது எனக்கு மிகவும் பிடித்தது.

நாங்கள் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்த நேரத்தில்; அவர் “ஆண்டவருக்குச் சித்தமானால்” என்று சொல்வதை, எவ்வளவு கருத்தோடு சொல்லுகிறார் என்று நான் உணர்ந்தேன். ஆப்பிரிக்காவிற் கென்று அநேக திட்டங்கள் என் மனதில் உண்டு. ஆனாலும், அதற்கு மேலாக அது கர்த்தரின் விருப்பமா, அவருக்கு சித்தமா, என்று அறிந்து செயல்பட விரும்பினார். நான் “ஆண்டவருக்கு சித்தமானால்” என்று சொல்லும்போது, நான் என்ன ஆண்டவரிடம் கேட்க விரும்புகிறேன் தெரியுமா? நான் செய்யும் இந்த காரியம், உமக்கு பிரியமா?

யாக்கோபு எழுதின நிருபத்தின் அந்த வசனங்களுக்கு ஏற்ப; அந்த மிஷினரி செயல்பட்டார். அவருடைய இந்த தாழ்மையான நடக்கை, எனக்கு மிகவும் பிடித்தது. அவர், எதிர்காலத்தைக் குறித்து கவலைப் படவில்லை. ஆனால், “தேவன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார் என்பதை, எனக்கு நானே ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்பு கிறேன்,”என்றார். அநேக விசுவாசிகள், அவர்களுடைய வாழ்க்கைக்கென்று தாங்கள் செய்ய விரும்புவதை, பல ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டம் தீட்டி விடுகின்றனர் என்று அவர் சொன்னார். “சரி, ஆண்டவரே, இதுதான் நான் செய்ய விரும்பும் காரியம். இது உமக்கு சரியாக இருக்குமென நான் நம்புகிறேன்,” என்று அவர்கள் சொல்லுகின்றனர்.

யாக்கோபு அதை வீம்பு என்று அழைக்கிறார்! “இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது” (யாக்கோபு 4:16).

நாம் ஒவ்வொரு நாளாக-பூமியில்-இப்போது-வாழவேண்டு மென்று, தேவன் நம்மை அழைக்கிறார். விரும்புவதையெல்லாம் உடனுக்குடன் தடையின்றி பெற்றுக்கொள்ளத் தாங்களே தீர்மானிக்கும், வீம்புக்காரர் இவ்வுலகத்தில் அநேகர் உண்டு. இது சாத்தானுடைய சூழ்ச்சியாக இருக்கலாம். அவன் அவர்களை நாளைய தினத்தையோ, அல்லது அடுத்த வருடத்தையோ, நோக்கிப் பார்க்க வைத்துவிட்டால், இன்று அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க, அவர்களுக்கு அவசியமாகத் தோன்றுவதில்லை. எதிர்காலத்தில், உலகில் நன்மைகள் மட்டும்தான் நடக்கும், என்று இவர்கள் வாழுவார்கள். தொலைவில் காணும் சாலைபோக்குவரத்து விளக்கை பார்த்துக்கொண்டே காரை ஓட்டிச்சென்று, ஆனால், எதிரே வரும் ஆளை கவனிக்காமல் மோதுவது போல. ஏனென்றால், நம்முடைய கவனமெல்லாம் தொலைவிலுள்ள போக்குவரத்து விளக்கின்மேல் மட்டும்தான் உள்ளது! நாம் நம்மை நாமே அழிவுக்கு நேராக செலுத்துகிறோம்.

நமக்கு முன்பாக என்ன இருக்கிறது என்று நம் ஒருவருக்கும் தெரியாது. நாம் சிந்தித்து, திட்டங்களை தீட்டலாம். ஆனால், அந்த திட்டங்களை செயல்படுத்த வைப்பது, தேவனுடைய காரியம். ஒவ்வொரு நாளையும், முழுவதுமாய் திருப்தியாக வாழ்வது என்பது, ஒரு சிலருக்குத்தான் தெரிந்த விஷயமாக இருக்கிறது. அதாவது, தற்பொது நாம் வாழும் வாழ்க்கையை, நிறைவோடே கர்த்தருக்குள் சந்தோஷமாய் அனுபவித்து வாழுவது. நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து, “ஆண்டவரே, உம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தும், அப்பொழுது நான் வீம்பு செய்யாமலும், உமக்கு முன்பாக ஓடாமலும் இருக்கமுடியும்,” என்று சொல்வோம்.

இயேசு, நமக்கு பரிபூரண ஜீவனை வாக்களித்திருக்கிறார் (யோவான் 10:10). நம்முடைய வாழ்க்கையை முழுவதுமாக அவரிடம் கொடுக்காவிட்டால், நாம் அவருடைய பரிபூரணத்திற்குள் பிரவேசிக்க முடியாது. இன்றைக்குள்ள சவால்களை சந்திக்காமல், நாளைக்காக திட்டம் தீட்டி, இன்றைய தினத்தை அலட்சியம் செய்வது, பிசாசின் பழைய தந்திரங்களில் ஒன்றாகும்.


பரலோக பிதாவே, இன்றைய தினத்தில், உம் சித்தம்போல் நான் வாழ எனக்கு உதவி செய்தருளும். ஆண்டவருக்கு சித்தமானால் என்ற வார்த்தையை நான் சொல்லுகிறேனோ இல்லையோ, என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட உம்முடைய சித்தத்தையே முக்கியமாக கருத எனக்குக் கற்றுத்தாரும். பிசாசானவன் என்னை நாளை கனவுகளில் மூழ்க வைத்து, இன்று உமக்குப் பிரியமாக வாழமுடியாமல் போகச் செய்வதை, நான் மேற்கொள்ள, எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.

Day 67Day 69

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More