இந்த நான்கு உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஆறு சிறகுகள் உடையனவாகவும், அவை கண்களால் நிறைந்தனவாகவும் இருந்தன. அவற்றின் சிறகுகளின் கீழேயும்கூட கண்கள் இருந்தன. இரவும் பகலும் இடைவிடாமல் அவை இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தன:
“ ‘எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தர்
பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்,’
இவரே இருந்தவரும், இருக்கின்றவரும், வரப் போகின்றவருமானவர்.”