மதுபானம் குடித்து வெறிகொள்ள வேண்டாம், அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடு ஒருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள். நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் எப்போதும் எல்லாவற்றுக்காகவும் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.