1
எபேசியர் 6:12
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஏனெனில், நமக்கு இருக்கும் போராட்டம் மனிதர்களோடு அல்ல. அது தீமையான ஆளுகைகளுக்கும், உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருண்ட உலகில் ஆட்சி செய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதாகவும், வானமண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.
Compare
Explore எபேசியர் 6:12
2
எபேசியர் 6:18
நீங்கள் அனைத்து வேளைகளிலும் எல்லாவிதமான மன்றாடல்களையும் வேண்டுதல்களையும் பரிசுத்த ஆவியானவரால் மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புடன் இருங்கள். பரிசுத்தவான்கள் அனைவருக்காகவும் எப்போதும் மன்றாடுங்கள்.
Explore எபேசியர் 6:18
3
எபேசியர் 6:11
பிசாசின் தந்திரமான யுக்திகளை நீங்கள் எதிர்த்து நிற்கத் தக்கவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.
Explore எபேசியர் 6:11
4
எபேசியர் 6:13
எனவே, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். அப்போது, தீமையின் நாளில் எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிடவும், எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு உறுதியுடன் நிலைநிற்கவும் முடியும்.
Explore எபேசியர் 6:13
5
எபேசியர் 6:16-17
இவை அனைத்துடன், விசுவாசத்தை கேடயமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீயவன் எய்கின்ற நெருப்பு அம்புகளை உங்களால் அணைக்க முடியும். இரட்சிப்பைத் தலைக் கவசமாக அணிந்துகொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரால் தரப்பட்டிருக்கும் இறைவனுடைய வார்த்தையாகிய வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
Explore எபேசியர் 6:16-17
6
எபேசியர் 6:14-15
ஆகவே உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள, சத்தியத்தை உங்கள் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டியாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்துகொண்டு, சமாதான நற்செய்தியை அறிவிப்பதற்கான தயார் நிலையை உங்கள் காலணியாக அணிந்துகொள்ளுங்கள்.
Explore எபேசியர் 6:14-15
7
எபேசியர் 6:10
இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருங்கள்.
Explore எபேசியர் 6:10
8
எபேசியர் 6:2-3
“உங்கள் தந்தையையும் தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குறுதியுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை. “அதன்படி உங்களுக்கு நன்மை உண்டாகும்; இந்த உலகத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்” என்பதே அந்த வாக்குறுதி.
Explore எபேசியர் 6:2-3
9
எபேசியர் 6:1
பிள்ளைகளே! கர்த்தரைப் பின்பற்றுகின்றவர்களாக நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
Explore எபேசியர் 6:1
Home
Bible
Plans
Videos