அப்போது பேதுரு அவனிடம், “அனனியாவே, பரிசுத்த ஆவியானவரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உனது இருதயத்தை நிரப்பியது எப்படி? நிலத்தை விற்றுப் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு பகுதியை நீ உனக்கென ஒளித்து வைத்துக்கொண்டாயே. அது விற்கப்படும் முன்பு, அது உனக்குச் சொந்தமாக இருக்கவில்லையோ? அது விற்கப்பட்ட பின்பும் அந்தப் பணம் உன்னிடம் தானே இருந்தது. இப்படிப்பட்ட ஒரு செயலை திட்டமிட்டுச் செய்ய நீ ஏன் நினைத்தாய்? நீ மனிதரிடம் பொய் சொல்லவில்லை, இறைவனிடமே பொய் சொன்னாய்” என்றான்.
அனனியா இதைக் கேட்டபோது, அவன் கீழே விழுந்து இறந்து போனான். நடந்ததைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகவும் பயமுண்டாயிற்று.