ஆதியாகமம் முன்னுரை

முன்னுரை
ஆதியிலே ஒவ்வொன்றும் எவ்வாறு ஆரம்பமானது என்பதை ஆதியாகமம் தெளிவுபடுத்துகின்றது. இறைவன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தவிதம் பற்றி அது விவரிப்பதோடு, மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டு பூரணமான ஒரு சூழலில் நிலைநிறுத்தப்பட்டான், பாவம் எவ்வாறு உண்டாயிற்று, வழி தவறிய மனிதனுக்கு இரட்சிப்பை வழங்க இறைவன் எப்படி அவனை வழிநடத்தினார் என்பதையும் விவரிக்கிறது.
மனிதன் ஏதேனிலிருந்து உலகம் முழுவதற்கும் பரவியதும் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடைய வாழ்க்கை வரலாறுகளும் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன.

高亮显示

分享

复制

None

想要在所有设备上保存你的高亮显示吗? 注册或登录