லூக்கா 13
13
பாவகோளுனபுட்டு மனசு திருந்துரி இல்லாந்துர சத்தோகுரி
1ஆவொத்திய யேசு ஏளுவுதுன கேளிகோண்டு இத்த கொஞ்ச ஆளுகோளு, “கலிலேயா ஜில்லாவுல இத்த கொஞ்ச ஆளுகோளு எருசலேமுல இருவுது தேவரோட குடில பலி கொட்டுகோண்டு இருவாங்க அவுருகோளுன ரோமரோட கவுருனராத பிலாத்து சாய்கொலுசிதா. ஈங்கே பிலாத்து அவுருகோளோட பலிகோளுல அவுருகோளு நெத்ரான கலக்கிபுட்டா” அந்து அவுரொத்ர ஏளிரு. 2யேசு அவுருகோளொத்ர, “கலிலேயாவுல இருவுது மத்த ஜனகோளுனபுட ஆ ஆளுகோளு பாவிகோளாங்க இத்துதுனால அவுருகோளியெ ஆங்கே நெடதுத்து அந்து நீமு நெனசுத்தாரியோ? 3அது ஆங்கே இல்லா அந்து நிமியெ ஏளுத்தினி. ஆதர நீமு நிம்மு பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்துலாங்க இத்துரெ நீமு எல்லாருவு ஆங்கேயே அழுஞ்சோவுரி. 4எருசலேமியெ பெளியே இருவுது சீலோவாமுல இத்த கோபுரா பித்து அதனெட்டு ஆளுகோளுன சாய்கொலுசித்தே. எருசலேமுல பதுக்கித மத்த எல்லா ஜனகோளுனபுட அவுருகோளு குத்தவாளிகோளாங்க இத்துதுனாலத்தா அவுருகோளியெ ஆங்கே நெடதுத்து அந்து நெனசுத்தாரியோ? 5அது ஆங்கே இல்லா அந்து நிமியெ ஏளுத்தினி. ஆதர நீமு நிம்மு பாவகோளியாக மனசு கஷ்டவாயி திருந்துலாங்க இத்துரெ நீமு எல்லாருவு ஆங்கேயே அழுஞ்சோவுரி” அந்து பதுலு ஏளிரு.
அண்ணு கொடுலாங்க இருவுது அத்தி அண்ணு மரா
6அப்பறா, யேசு ஈ உவமெ கதென அவுருகோளொத்ர ஏளிரு: “ஒந்தொப்பா அவுனோட திராச்செ தோட்டதுல அத்தி அண்ணு மரான நெட்டுயித்தா. அவ பந்து அத்தி அண்ணுகோளுன தேடுவாங்க அதுல ஒந்து அண்ணுனவு கண்டுயிடிலா. 7அப்பறா அவ திராச்செ தோட்டான நோடிகோம்புது ஆளொத்ர, ‘இதே நோடு, மூறு வருஷகோளாங்க நானு ஈ அத்தி அண்ணு மரதுல அண்ணுகோளுன தேடிகோண்டு பந்தே. ஆதர அதுல ஒந்து அண்ணுனவு கண்டுயிடிலா. அதுனால இதுன பெட்டியாக்கிபுடு. இது ஒந்துவுக்கு பிரியோஜனா இல்லாங்க மண்ணுல இருவுது சத்துன கெடுசுத்தாத’ அந்தேளிதா. 8ஆதர ஆ ஆளு தோட்டதோட சொந்தகாரரொத்ர, ‘ஐயா, இன்னுவு ஒந்து வருஷக்கு நோடுவாரி. நானு இதுன சுத்தி சென்னங்க குழி தோண்டி, ஒரான ஆக்குத்தினி. 9இது அடுத்த வருஷா அண்ணு கொட்டுரெ செரி, அதுன புட்டுபுடுவாரி. அண்ணு கொடுலாங்க இத்துரெ, இதுன பெட்டி ஆக்குவாரி அந்து ஏளிதா’” அந்தேளிரு.
யூதருகோளோட ஓய்வு தினதுல ஒள்ளிது மாடுவுது
10யூதருகோளோட ஒந்து ஓய்வு தினதுல யேசு யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடதுல ஜனகோளியெ ஏளிகொட்டுகோண்டு இத்துரு. 11ஆக அதனெட்டு வருஷகோளாங்க அவுளுன நெடைவுக்கு முடுஞ்சுலாங்க மாடியித்த ஒந்து ஆவி இடுதுயித்த ஒந்து எங்கூசு அல்லி இத்துளு. அவுளு கூனு பித்து இத்துளு. அவுளுனால கொஞ்சகூட நேராங்க நில்லுவுக்கு முடுஞ்சுலா. 12யேசு அவுளுன நோடி, அவுளுன அவுரொத்ர பருவுக்கு கூங்கிரு. அவுரு அவுளொத்ர, “அம்முணி, நானு நின்னு சீக்குல இத்து நின்னுன விடுதலெ மாடுத்தினி” அந்தேளிரு. 13அவுரு அவுளு மேல அவுரோட கைகோளுன மடகிரு. ஆகவே அவுளு நேராங்க நிந்து தேவருன புகழ்ந்து ஏளிளு. 14ஆதர, யேசு அவுருகோளோட ஓய்வு தினதுல அவுளுன சென்னங்க மாடிதுனால யூதருகோளு தேவரொத்ர வேண்டுவுது எடதோட தலெவா கோப்பவாதா. அவ சென்னங்க மாடுவுதுன ஒந்து கெலசா அந்து நெனசிதுனால ஜனகோளொத்ர, “ஒந்து வாரதுல கெலசமாடுவுக்கு நம்மு யூதமத சட்டா அனுமதுசுவுது ஆறு தினகோளு இத்தாதையே. நீமு சென்னங்க இல்லாங்க இத்துரெ, ஆ தினகோளுல இல்லி பந்து சென்னங்க ஆகிகோண்டு ஓகுரி. ஓய்வு தினதுல ஆங்கே மாடுகூடாது” அந்தேளிதா.
15அதுக்கு ஆண்டவரு அவுனொத்ர, “வெளிவேஷகாரனே, நிம்முல ஒந்தொப்புனுவு ஓய்வு தினதுல அவுனோட எத்துனவோ இல்லாந்துர கத்தெனவோ கொட்டாயில இத்து கழசி அதுன நீரு குடிவுக்கு கூங்கிகோண்டு ஓவுது இல்லவா? 16இதே நோடுரி, ஆபிரகாமோட தலெகட்டுல இத்து பந்த ஈ எங்கூசுன சாத்தானு அதனெட்டு வருஷகோளாங்க சீக்குல கட்டி மடகியித்தா. இவுளுன இது ஓய்வு தினவாங்க இத்துரிவு, ஆ கட்டுல இத்து கழசிபுடு பேக்காதில்லவா?” அந்தேளிரு. 17அவுரு ஈங்கே ஏளுவாங்க, அவுருன எதுத்த எல்லாருவு வெக்கபட்டுரு. எல்லா ஜனகோளுவு அவுரு மாடித எல்லா அதிசயவாத காரியகோளுன பத்திவு சந்தோஷபட்டுரு.
தேவரோட ஆட்சின பத்தித உவமெ கதெகோளு
(மத்தேயு 13:31–32; மாற்கு 4:30–32)
18அப்பறா யேசு ஜனகோளொத்ர, “தேவரோட ஆட்சி எது மாதர இத்தாத? அதுன எதுக்கு ஒப்பாங்க மடகுவே? 19அது ஒந்து சின்னு கடுகு பெதெ மாதர இத்தாத. ஒந்தொப்பா அதுன அவுனோட கெத்தெல நெட்டா. அது பெழது ஒந்து தொட்டு மரவாங்க ஆயோத்து. பானதுல பறைவுது பறவெகோளு அதோட கெளெகோளுல கூடு கட்டி தங்கித்து” அந்தேளிரு.
உளியேறித மாவு
(மத்தேயு 13:31–32)
20இன்னுவு அவுரு, “தேவரோட ஆட்சின நானு எதுக்கு ஒப்பாங்க மடகுவே? 21அது உளியேறித மாவியெ ஒப்பாங்க இத்தாத. ஒந்து எங்கூசு அதுன எத்தி மூறு படி மாவு முழுசுவு உளுசுவுது வரெக்குவு அதுல கலக்கி மடகிளு” அந்தேளிரு.
குறுகலாங்க இருவுது கதவு
22யேசு அவுரோட சீஷருகோளுகூட எருசலேமியெ பயணமாடிகோண்டு ஓவாங்க ஓவுது தாரில இருவுது பட்டணகோளு எல்லாத்துலைவு, ஊருகோளு எல்லாத்துலைவு ஜனகோளியெ தேவருன பத்தி ஏளிகொட்டுகோண்டு ஓதுரு. 23ஆக ஒந்தொப்பா அவுரொத்ர, “ஆண்டவரே, தேவரு காப்பாத்துவுது ஆளுகோளு கொஞ்ச ஆளுகோளுத்தானா?” அந்து கேளிதா. அதுக்கு அவுரு அவுனொத்ர, 24“சொர்கக்கு ஓவுது தாரி குறுகலாங்க இருவுது கதவு மாதர இருவுதுனால ஆ கதவு வழியாங்க ஓவுக்கு முயற்சிமாடுரி. தும்ப ஆளுகோளு அது வழியாங்க ஒழக ஓவுக்கு வழி நோடிரிவு அவுருகோளுனால அதொழக ஓவுக்கு முடுஞ்சுனார்து அந்து நிமியெ ஏளுத்தினி. 25தேவரு ஒந்து மனெயோட சொந்தகாரரு மாதர இத்தார. மனெயோட சொந்தகாரரு மனெ கதவுன முச்சிதுக்கு இந்தால நீமு பெளியே நிந்துகோண்டு, ‘ஆண்டவரே, ஆண்டவரே, நமியாக கதவுன தெகெரி அந்து ஏளுவாங்க அவுரு, இல்லா, நீமு ஏ எடான சேந்தோரோ நனியெ தெளினார்து’ அந்து பதுலு ஏளுவுரு. 26ஆக நீமு அவுரொத்ர, ‘நாமு நிம்முகூட கூளுண்டுரியே; நீமு நம்மு ஊருகோளோட பீதிகோளுல ஜனகோளியெ ஏளிகொட்டுரியே’ அந்து பதுலு ஏளுவுரி. 27ஆதிரிவு அவுரு, ‘நீமு ஏ எடான சேந்தோரு அந்து நனியெ தெளினார்து. அக்குருமகாரராத நீமு எல்லாருவு நன்னுன புட்டுகோட்டு தள்ளி ஓகுரி’ அந்தேளுவுரு. 28நீமு ஆபிரகாமுனவு, ஈசாக்குனவு, யாக்கோபுனவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரு எல்லாருனவு தேவரு ஆட்சிமாடுவுது எடதுல நோடுவுரி. ஆதர நீமு நிம்முன ஆ எடக்கு பெளியே இருவுதுன நோடுவுரி. அல்லி நிமியெ அழுகாச்சிவு, அல்லுன கச்சுவுதுவு இருவுது. 29கேடெ, படுவா, படகா, தெக்கா தெசெகோளுல இருவுது எடகோளுல இத்து பந்து தேவரு ஆட்சிமாடுவுது எடதுல விருந்துண்ணுவுரு. 30ஆக மொதல்ல பந்தோரு கடெசியாங்க பந்தோராங்க ஆயோவுரு. கடெசியாங்க பந்தோரு மொதல்ல பந்தோராங்க ஆயோவுரு” அந்தேளிரு.
யேசு எருசலேமியாக வருத்தபடுவுது
31அதே ஒத்துல பரிசேயரு கூட்டான சேந்தோரு கொஞ்ச ஆளுகோளு பந்து யேசுவொத்ர, “நீமு ஈ எடானபுட்டு ஓய்புடுரி. ஏக்கந்துர ஏரோது அந்திப்பா நிம்முன சாய்கொலுசுவுக்கு விரும்புத்தான” அந்தேளிரு. 32அதுக்கு யேசு அவுருகோளொத்ர, “நானு இந்தியெவு, நாளெயெவு பேய்கோளுன ஓடுசி, சீக்கு பந்தோருன சென்னங்க மாடி மூறாவுது தினதுல நன்னு கெலசா முழுசுனவு மாடிமுடுசுவே. 33இந்தியெவு, நாளெயெவு, அடுத்த தினாவு நானு எருசலேமியெ ஓவுது நன்னு பயணான புடுலாங்க இருபேக்கு. ஏக்கந்துர, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோருல ஒந்தொப்புருவு எருசலேமியெ பெளியே சாய்வுது இல்லா அந்து நானு ஏளிதே அந்து நீமு ஓயி நரி மாதர இருவுது ஏரோதொத்ர ஏள்ரி” அந்தேளிரு.
எருசலேமுல இத்த ஜனகோளு மேல யேசு தோர்சித அன்பு
(மத்தேயு 23:37–39)
34அப்பறா யேசு, “எருசலேமே, எருசலேமே, நின்னு ஜனகோளு தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோருன சாய்கொலுசி, தேவரு நின்னொத்ர கெளுசிதோருன கல்லு பீசி படுதுரே. ஒந்து கோழி அதோட குஞ்சுகோளுன அதோட ரெக்கெகோளியெ கெழக சேர்சி மடகுவுது மாதர ஏசோ தடவெ நானுவு நின்னு மக்குளுகோளுன சேர்சிகோம்புக்கு விருப்பவாங்க இத்தே. ஆதர நானு ஆங்கே மாடுவுக்கு நீமு விரும்புலா. 35இதே நோடுரி, நிம்மு தேவரோட குடியெ ஒந்தொப்புருவு பர்லாங்க பாழாங்க ஓய்புடுவுது. ‘ஆண்டவரோட அதிகாரதோட பருவோரு கொட்டுமடகிதவரு’ அந்து நீமு ஏளுவுது வரெக்குவு நீமு நன்னுன திருசிவு நோடுனார்ரி அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.
Айни замон обунашуда:
லூக்கா 13: KFI
Лаҳзаҳои махсус
Паҳн кунед
Нусха
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
@New Life Computer Institute