பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நீங்கள் கைவிடப்பட்டவராக அல்லது கவனிக்கப்படாதவராக விடப்பட்டிருக்கலாம்;
ஆனால் – இயேசு: நான் ”உங்கள் தேவன் - உங்களை விட்டு அகன்று போகவில்லை” என்கிறார்
அவர் உங்கள் ஒவ்வொரு கண்ணீரையும் கண்டிருக்கிறார்; உங்கள் கூக்குரல் ஒவ்வொன்றையும் கேட்டிருக்கிறார்; உங்கள் தூக்கமில்லா இரவு ஒவ்வொன்றையும் எண்ணி வைத்திருக்கின்றார் -
நீங்கள் வேதனைகளைத் தாங்கினீர்கள் உண்மையுள்ளவர்களாய் நின்றீர்கள் – உங்களுக்கான பெருவளர்ச்சி / தடைமுறிவு – திருப்புமுனையான காலம் -இப்பொழுது வந்துவிட்டது.
உங்களைக் கட்டியிருந்த சங்கிலிகள் முறியும்; உங்களுக்கு முன்பாக நின்ற மலைகள் பெயர்ந்து சமுத்திரத்தில் விழும்; உங்களுக்கு முன்பாக மூடினதாக இருந்த கதவுகள் விசாலமாக திறந்திடும். நீங்கள் ஓர் அற்புதத்தை பெற்றுக்கொள்ளும் விளிம்பில் நிற்கிறீர்கள்.
உங்களுக்கு தற்செயலாகவோ அல்லது காரணம் இல்லாமலோ இது சம்பவிக்கவில்லை.இது சர்வலோகத்தை ஆட்சிசெய்யும் தேவனின் சர்வவல்ல கரத்தால் சம்பவிக்கும்.
சமாதானத்துக்கான நினைவுகள்: அவருடைய கரம், அவருடைய வல்லமை, அவருடைய அன்பே இதைச் செய்தது என்பதில் நீங்கள் எள் அவும் சந்தேகப்படாத வகையில் தேவன்-அவர் உங்கள் வாழ்க்கையில் அசைவாட / செயல்படப் போகிறார். விசுவாசத்தில் மட்டும் உறுதியாக இருங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d