நம்மில் தேவனின் திட்டம்மாதிரி

நம்மில் தேவனின் திட்டம்

5 ல் 1 நாள்

நம்மில் தேவன் கொண்டுள்ள தெய்வீக திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரே வழி

நம் ஒவ்வொருவருடைய தெய்வீக திட்டத்தை கண்டு கொள்வது ஒரு விசுவாச பயணம். மேலும் இது நம்முடைய வாழ்க்கைக்கான தேவனின் ஒரு முக்கிய குறிக்கோளாகும்.

நாம் மனதில் கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால்:

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான தேவ அழைப்பினை பிறப்பின் போதே பெற்றிருக்கின்றோம். இதை புரிந்து செயல்படுவது என்பது நம் விசுவாசத்தின் ஆழமான ஒரு செயலாகும். தேவன் நமக்குள் நம்மை சிருஷ்டிக்கும் போதே வைத்திருந்த திறமைகள் தாலந்துகள் அதாவது அவர் நமக்குள் விதைத்த மகத்துவத்தின் விதைகள் செழித்து வளர வேண்டும் என்ற அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் தான் நாம் உருவாக்கப்பட்டோம். மேலும் ஜெபத்தின் மூலம், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கான தேவனுடைய நோக்கத்தையும் அவருடைய சித்தத்தையும் அறிந்து தேவனுடைய ஆதி தீர்மானத்துடன் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஆதியிலே தேவன் அவருடைய சாயலாக நம்மை உருவாக்கிய மகத்துவத்தின் செயலை உரிமைப்படுத்துவோம்.

தேவன் ஏற்கனவே மகத்துவத்தின் விதைகளை நமக்குள் வைத்திருக்கிறார் என்பதை மனதில் கொள்வதின் மூலம் செயல்பட தொடங்குவோம். அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளுவோம். எரேமியா 29:11 இல், “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” திட்டவட்டமாய் அவருடைய அனாதி சித்தத்தின்படி நாம் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ளுவோம். தேவனின் திட்டத்தில் அவர் நமக்கு வழங்கிய ஒவ்வொரு தாலந்துகளும் சிறப்பான திறமைகளும் அடங்கும். இந்த கிருபை வரங்கள் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பி, அவற்றை முழுமையாகப் பயன்படுத்த தேவையான தைரியத்திற்காகவும் விசுவாசத்திற்காகவும் ஜெபம் செய்வோம்.

தேவனின் வார்த்தையால் வழிநடத்தப்படும் வாழ்க்கையை அறிக்கை செய்வது பற்றிய உண்மைகள்

இவ்வுலகில் நம்மைச் சுற்றி பல குரல்கள் இருப்பதால், நாம் நமது தேவாதி தேவனின் குரலுக்கு மட்டுமே பதில் கொடுப்போம் என்று உறுதிகொள்வது மிக மிக அவசியம். நம் இரட்சகராகிய இயேசு நம்மைப் பார்த்து கூறுவது என்னவென்றால் ”என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.” (யோவான் 10:27). தேவனின் குரல் நிச்சயமாய் நம்மை நல்ல முடிவுக்கு நேராக வழிநடத்தும், தடைகள், எதிர்ப்புகள், சாத்தானின் சோதனைகள், அல்லது அவரது விருப்பத்துடன் ஒத்துப்போகாத பலவிதமான தாக்கங்களிலிருந்து விடுவித்து வழிநடத்த தேவனை நோக்கி ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும். அவருக்கு மட்டுமே செவிசாய்க்க வேண்டும் என்ற இந்த அர்ப்பணிப்புக்கு நேரான திசையில் செல்ல நாம் உறுதி கொள்ள வேண்டும்.

நமக்கு அருளப்பட்ட தனிப்பட்ட திறமைகள் மற்றும் தாலந்துகள் தற்செயலாய் கிடைக்கப் பட்டவைகள் அல்ல

அவை தேவனின் நோக்கம் வெளிப்படும் ஒரு வழிப்பாதை. இந்த திறமைகள் இருளான உலகத்திலும் பிரகாசமாக பிரகாசிக்க நம்மை ஒப்புக்கொடுத்து அறிக்கையிட தொடங்க வேண்டும். தேவனின் திட்டத்துடன் இணைந்த பிற விசுவாசிகளுடன் நம்மை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும். தேவன் அருளிய சொல்ல முடியாத திறமைகள் பயன்படுத்தப்படாமல் போகாது என்பது நிச்சயம். ஆனால் திட்டமாக நாம் விசுவாசித்தால் நம்மை முக்கியமான மனிதர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவருடைய நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்ற தேவன் அனுமதிப்பார் என உறுதி கொண்டு அறிக்கையிட வேண்டும். ஒவ்வொரு கிருபையும் வரங்களும் அவருடைய விருப்பத்தின் வெளிப்பாடாகவும், அவருக்கே மகிமையைக் கொண்டுவர முழு மனதுடன் செயல்பட வேண்டிக் கொள்ள வேண்டும்.

எப்போதுமே தோல்வியை நிராகரித்து வெற்றியை எதிர்நோக்கியே நாம் வாழ வேண்டும்.

நம் வாழ்க்கையில் தோல்வி மற்றும் அவமானத்திற்கு இடமில்லை என்று அறிக்கை செய்து முழு மனதுடன் விசுவாசிக்க வேண்டும். ஏனென்றால் தேவன் தம் பிள்ளைகளுக்கு நம்பிக்கை மற்றும் வெற்றியை வாக்களித்துள்ளார். “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” ரோமர் 8:37 தேவனின் ஆசீர்வாதம் நமது ஒவ்வொரு முயற்சியையும் ஆசீர்வதிக்கும் என்று என்று உறுதி கொண்டு அறிக்கையிட்டு ஜெபிக்க வேண்டும். ஒருவேளை தோல்வி போல் தோன்றினாலும் நம்பிக்கையுடன் பின்னடைவுகளை நாம் கடக்க முன் வர வேண்டும். நம் வாழ்க்கையில் வெற்றியை அறிக்கை இடுவதன் மூலம், நாம் தேவனின் சித்தத்துடன் ஒத்துப் போகிறோம். மேலும் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவருடைய தயவை நம்பி சார்ந்து கொண்டே இருக்கிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுதல் நல்லது.

இருளுக்கு எதிரான தெய்வீக பாதுகாப்பில் நம்பிக்கை வைத்தல்

பல கோணங்களில் இருந்து எதிர்ப்புகள் வருவது போல் இருந்தாலும் ஒருவேளை அப்படியே வந்தாலும் தேவனின் பாதுகாப்பு தவறாது. எனவே சந்தேகம், பயம் அல்லது ஊக்கமின்மை போன்ற வடிவங்களில் வரக்கூடிய இருளின் குரல்களை எதிர்த்து கடிந்து நிராகரித்து, எதிர்மறையான சக்திகளுக்கு எதிராக அவைகளின் பின்னடைவுக்காக உறுதியுடன் ஜெபித்து வெற்றி பெற அதிகாரம் பெற்றிருக்கிறோம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கான தேவனின் திட்டங்கள் மட்டுமே வெற்றிபெறும் என்று தேவனில் உறுதிக் கொள்ள வேண்டும். அவர் நம்மை எல்லா தீங்கிலிருந்தும் பாதுகாப்பார் என்று நம்புவதன் மூலம். அவர் நம் அடைக்கலம் மற்றும் பாதுகாவலர் என்பதை உறுதியாய் நம்பி அறிக்கை செய்வோம். அவரை நம்புகிறவர்களுக்கு தேவன் அடைக்கலமாகவே இருக்கிறார்.

இறுதி பிரதிபலிப்பு

உங்கள் தெய்வீக அழைப்பின் முடிவு என்பது நம்பிக்கையின் அறிக்கையில் இருக்கிறது. தேவனால் வழிநடத்தப்படும் அவருடைய நோக்கத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான அர்ப்பணிப்பு. நாம் அவருடைய மகத்துவத்தை அங்கீகரிப்பதன் மூலம், அவருடைய அழைப்பில் அல்லது தெரிந்து கொள்ளுதலின் குரலுக்கு மட்டுமே பதிலளிப்பதன் மூலம், நம் ஒவ்வொருவரின் தனித்துவமான திறமைகளையும் தாலந்துகளையும் தழுவி, நாம் ஒவ்வொருவரும் அவருடைய திட்டத்துடன் இணைந்து கொள்கிறோம். அவருடைய பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து, நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவன் அழைத்த அழைப்பை நிறைவேற்றி, தைரியமாக முன்னேற நமக்கு அதிகாரம் தேவனால் தரப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

நம்மில் தேவனின் திட்டம்

நம்மில் தேவனின் திட்டம் என்பது நாம் இழந்து போன தேவனின் பிள்ளைகள் என்ற முழுமையான நிலையை மீண்டும் பெறுவதாகும். தேவனின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு, தேவன் நம்மை உருவாக்கும் போதே நமக்கு தந்தருளின இயல்பான வலிமைகள், திறமைகள் இவற்றை உரிமைப் படுத்தி விசுவாசத்தில் செயல்படுவதற்கு வழி காட்டுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தேவனின் பரிபூரண சித்தத்துடன் இணைந்து தேவனுடைய அழியாத வாக்குறுதிகளில் நம்பிக்கை உடையவர்களாக விசுவாசத்துடன் தொடர்ந்து வாழ கிருபை பெற்றுக்கொள்கிறோம். நமது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் நாம் ஆன்மீக உன்னத அந்தஸ்தை இழந்து விட்டோம். தேவன் நம் ஒவ்வொருவருக்காக திட்டம் பண்ணின வாழ்க்கையை நோக்கி நம்பிக்கையுடன் செல்லுவோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ruminatewithannie.in