என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?மாதிரி

என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?

7 ல் 6 நாள்

ஆண்டவரை மறவாதே...

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்." (சங்கீதம் 42:5-6)

நான் ஒருமுறை ஒரு பள்ளி ஆசிரியரைப் பற்றிய ஒரு கதையை வாசித்தேன். அவள் 9 ஆம் வாய்பாட்டை கரும்பலகையில் இவ்வாறு எழுதினாள்.

9x1=7

9x2=18

9x3=27

9x4=36

9x5=45

9x6=54

9x7=63

9x8=72

9x9=81

9x10=90

அந்த ஆசிரியை எழுதி முடித்ததும், தன் முன் இருக்கும் மாணவர்களைப் பார்த்தாள். முதல் சமன்பாடு தவறாக இருந்ததால் அவர்கள் அனைவரும் ஆசிரியையைப் பார்த்துச் சிரித்தனர்! ஆனால் ஆசிரியையோ அதை வேண்டுமென்றே தவறாக எழுதியிருந்தாள். 9 உண்மைகளை சரியாகவும் ஒன்றை மட்டுமே தவறாகவும் எழுதியிருந்தபோதிலும், தான் ஒரே ஒரு தவறை செய்ததற்காக பரியாசம் பண்ணப்பட்டு விமர்சிக்கப்பட்டாள் என்று அவர்களிடம் கூறினாள். மேலும் உலகம் அவர்களை அப்படித்தான் நடத்தும் என்றும், மற்றவர் செய்யும் நல்ல விஷயங்களை விட தவறான விஷயங்களில் மட்டுமே உலகம் கவனம் செலுத்தும் என்றும் கூறினாள். ஆகவே உறுதியாக இருக்கவும், பரியாசம் மற்றும் விமர்சனங்களை விட்டுவிட்டு எப்போதும் ஞானமுள்ளவர்களாய் இருக்கவும் வேண்டும் என்று அவள் அவர்களுக்கு அறிவுறுத்தி வாழ்த்தினாள்!

நமது விசுவாசத்திற்கும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இக்கதைக்கும் இடையே நாம் ஒரு தொடர்பைக் காணலாம். ஆண்டவர் உனக்குச் செய்த நல்ல காரியங்களை நீ சில சமயங்களில் மறந்துவிடுகிறாயா? ஆண்டவர் உன் வாழ்வில் தீமையான எந்தக் காரியங்களையும் செய்யவில்லை என்றாலும், மனவேதனை, வலி, நோய் மற்றும் துக்கம் போன்ற நேரங்களை நீ சந்தித்திருக்கலாம். அந்த நேரங்களில், உன் எண்ணங்களை நீ எப்படி சரிசெய்வாய்?

இன்று உன் ஆத்துமாவில் நீ கலங்கி, வேதனை நிறைந்த காலத்தில் இருப்பாயானால், தாவீது செய்ததைப்போல் செய்து, ஆண்டவரையும் அவருடைய நன்மையையும் நினைவுகூரும்படி உன்னை நான் ஊக்குவிக்கிறேன்.

சங்கீதக்காரனாகிய தாவீது எழுதுகிறார், "... அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்." (சங்கீதம் 77:10-12 வசனங்களின் சூழலைப் பார்க்கவும்)

வேதாகமத்தில் புலம்பல் புத்தகத்தில் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது, “இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்!” (புலம்பல் 3:21-24)

நினைவாற்றலில் வல்லமை இருக்கிறது!

கூடுமானால், ஆண்டவர் செய்த சகல நன்மைகளையும் பட்டியலிட்டு, அவற்றைப் பற்றி சிந்திக்கத் துவங்கு. அவர் உன்னை எப்போது குணப்படுத்தினார் அல்லது விடுவித்தார்? அவர் எப்போதாவது உன்னைக் கைவிட்டிருக்கிறாரா? அவருடைய அன்பும் நன்மையும் உன் வாழ்வில் நிபந்தனையற்றதாக இருந்ததா? இன்றும் அவர் உனக்காக எப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்திருக்கிறார்?

ஆம், அவரது இரக்கம் மிகவும் பெரியது!

இன்று அபரிவிதமாக ஆசீர்வதிக்கப்படுவாயாக.

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?

“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=discouragementseries