பலங்கொண்டு திடமனதாயிரு!மாதிரி

பலங்கொண்டு திடமனதாயிரு!

7 ல் 1 நாள்

உன் ஆண்டவர் உன்னை வல்லமையுள்ள நபராக மாற்ற அபிஷேகிக்கிறார்!

அடுத்த ஏழு நாட்களுக்கு, யோசுவா 1:9ஐ நாம் விரிவாக தியானிக்கப் போகிறோம். வாழ்க்கையின் சிரமங்களுக்கு மத்தியில் ஆண்டவர் நம்மை அழைக்கும் வண்ணமே, வலிமையானவர்களும் தைரியமானவர்களுமாக மாறுவதற்கு உதவும் சில திறவுகோல்களுக்குள் நாம் செல்வோம்!

தம்முடைய வார்த்தையில், ஆண்டவர் யோசுவாவிடம் பின்வரும் வசனம் மூலம் பேசுகிறார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." (யோசுவா 1:9)

யோசுவா ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டார்: அது என்னவென்றால், மிகுந்த சாந்தகுணமுள்ளவரும் விசேஷித்த தலைவருமான மோசே விட்டுச் சென்ற பணியை யோசுவா தொடர்ந்து செய்துமுடிக்க வேண்டும். யோசுவாவின் பணி என்ன? இஸ்ரவேல் மக்கள் எதிர்கொள்ளவிருந்த சத்துருக்களின் கையிலிருந்து அவர்களைத் தப்புவித்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுவந்து சேர்ப்பதாகும்.

"நான் உனக்குக் கட்டளையிடவில்லையா?" என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார். ஆண்டவர் உனக்கும் இந்தக் கட்டளையைத் தருகிறார்... ஆகவே நீ எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. வாலிப பருவத்தில் சந்தித்த கடினமான காலம், முறிந்த உறவு, வேலை வேண்டிய கட்டாயம், நம் தரப்பில் உண்டான தவறு எனும் இப்படிப்பட்ட எதுவும் ஆண்டவரைக் கிரியை செய்யவிடாமல் தடுக்க முடியாது.

வேதாகமம் நமக்குச் சொல்கிறது: “அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.” (சங்கீதம் 33:9)

ஆண்டவரது வாக்குத்தத்தம் நிச்சயமாக நிறைவேறும். அவர் கட்டளையிட்டதை யாராலும் தடுக்க முடியாது! உண்மையில், ஆண்டவர் நிறைவேற்றும்படி நியமித்ததை எது தடுக்க முடியும்? சர்வவல்லமையுள்ள ஆண்டவரை யாரால் தடுக்க முடியும்? அவருடைய மகத்துவத்தை நாம் நம்பலாம். முழங்கால்கள் யாவும் யூதராஜ சிங்கத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக முடங்கும்!

நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே! உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வை. ஏனென்றால், உன் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தக்கூடியவர் அவரே; உன் எதிர்காலத்தை மேலும் சிறப்புறச் செய்ய அவர் விரும்புகிறார். நல்ல செய்தி என்னவென்றால், ஆண்டவர் தமது திட்டங்களில் ஒருபோதும் தவறுவதில்லை.

எரேமியாவின் வாழ்க்கையிலிருந்து இந்த உதாரணத்தைப் பார்:

“கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” (எரேமியா 1:4-8)

உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை இன்று சத்தமாக அறிக்கையிடு. அவர் கட்டளையிட, வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

பலங்கொண்டு திடமனதாயிரு!

நீ நிறைய சவால்களை சந்திக்கிறாயா? உன்னை பயமுறுத்துவதுதான் பிசாசின் தந்திரம். அவன் கெர்ஜிக்கிற சிங்கத்தைப்போல உன்னைச் சுற்றித்திரிகிறான். ஆனால் திடமனதாயிரு என்று சொல்பவரோ, உன்னை அதைரியப்படுத்தும் எதையும் விட வலிமையானவர். உன்னை பலப்படுத்தக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே! வாழ்வின் உபத்திரவங்களுக்கு மத்தியில் உன் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையை அவர் மீது வைத்துவிட்டு, நீ வலிமையாகவும் தைரியமாகவும் செயல்படும்படி, பலங்கொண்டு திடமனதாயிருப்பது எப்படி என்பதை நாம் இந்த தியானத்தின் வாயிலாகக் காண்போம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=beingstrongandcourageous