கிறிஸ்துமஸ் கதைமாதிரி

The Christmas Story

5 ல் 1 நாள்

என் மக்களுக்கு ஆறுதல் அளியுங்கள்

கிறிஸ்துமஸ் கதை ஆச்சரியங்கள் நிறைந்தது. அடுத்த வரும் ஐந்து நாட்களில், இந்த தொன்ம நிகழ்வுகளின் திருப்பங்களையும், மறுத்திருப்பங்களையும் ஆராய்ந்து, நமக்கு இன்று அவை என்ன அர்த்தம் தருகிறது என்பதைக் கண்டுபிடிப்போம்.

எப்போதாவது கடவுள் வெகு தொலைவில் இருப்பதை போல உணருகிறீர்களா? உங்களது கடினமான சூழல்கள் எதையும் காணமல் அவர் அமைதியாக இருப்பது போல் தோன்றுகிறதா? ஆனால், உண்மையென்னவென்றால், நீங்கள் தனித்து விடப்படவில்லை.

எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்ட சமூகத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் உங்கள் நாட்டை ஆள்கிறார்கள். உங்களை இழிவாக நடத்துகிறார்கள். கடவுள் உங்கள் மக்கள் மீது அன்பாக இருந்ததை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு வளர்ந்தீர்கள். ஆனால் வருடங்கள் செல்ல செல்ல, நீங்கள் தளர்ந்து போய் ஆச்சரியத்துடன் வினவலாம்!உண்மையில் கடவுள் நம்முடன் இருக்கிறாரா?

பூர்வ இஸ்ரவேலில் இருந்த அநேகர் இயேசுவின் வருகைக்கு முந்தைய ஆண்டுகளில் இப்படித்தான் எண்ணியிருக்கலாம். அவர்கள் பல ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டனர். இழிவாக நடத்தப்பட்டனர். ஆனாலும், அவர்களை விடுவித்து பரிபூரண வாழ்வை அருள ஒரு இரட்சகரை கடவுள் அனுப்புவார் என்று பலர் நம்பினர்.

சில சமயங்களில் நீங்கள் ஏதாவது ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து, அதற்காக காத்திருந்து பிரார்த்தனை செய்தாலும், கடவுள் பதிலளிப்பாரா என்று உறுதியாக தெரியவில்லையா? அப்படியானால், இஸ்ரவேல் ஜனங்கள் உணர்ந்ததை போலவே நீங்களும் இருக்கிறீர்கள். ஆனால், அவர்கள் காத்திருந்த போதும், கடவுள் அவர்களுடன் கூடவே இருந்தார்.

ஆனால் கடவுள் வெறும் காத்திருப்பில் சும்மா இருக்கவில்லை. யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆச்சரியமான மற்றும் அற்புதமான ஒன்றைச் செய்ய அவர் திரைக்குப் பின்னால் வேலை செய்தார்.

அவர் ஒரு மீட்பரை மட்டும் அனுப்பவில்லை. அவரே நேரில் வந்தார். ஆனால் ஒரு சக்திவாய்ந்த ஆட்சியாளராகவோ அல்லது வலிமையான போர்வீரனாகவோ அல்ல. மாறாக, தன்னைத் தாழ்த்தி, மரியா என்ற இளம் பெண்ணின் வயிற்றில் குழந்தையாக பிறந்தார்.

கடவுள் உங்களுடன் இருக்கிறாரா என்று எப்போதாவது உங்களுக்கு ஐயம் எழுந்தால், கிறிஸ்மஸ் நிகழ்வை தியானியுங்கள். ஏனென்றால், நாம் பார்க்காவிட்டாலும், கடவுள் எப்போதும் நம்முடன் இருக்கிறார், நமக்காக வேலை செய்கிறார்.

பிரார்த்தனை: அன்புள்ள கடவுளே, நீர் எங்களுடன் இருப்பதற்காக நன்றி. உமது இருப்பை என்னால் உணர முடியாவிட்டாலும், உம்மை நம்புவதற்கு எனக்கு உதவுங்கள். கிறிஸ்மஸின் அற்புதமான நிகழ்வுகளைப் பற்றி நான் சிந்திக்கும்போது உங்கள் அன்பில் நம்பிக்கையுடன் இருக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் பெயரில், ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Christmas Story

ஒவ்வொரு நல்ல கதைக்கும் ஒரு திருப்பம் இருக்கும்— அந்த எதிர்பாராத தருணம் எல்லாவற்றையும் மாற்றும். வேதாகமத்தின் மிகப்பெரிய திருப்பங்களில் ஒன்று கிறிஸ்து பிறப்பு. அடுத்த ஐந்து நாட்களில், இந்த ஒரு நிகழ்வு உலகை எப்படி மாற்றியது மற்றும் இன்று உங்கள் வாழ்க்கையை எப்படி இக்கதை மாற்றும் என்பதை ஆராய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்