விலைக்கிரயம்மாதிரி

விலைக்கிரயம்

3 ல் 1 நாள்

இந்தியாவின் தேவைகளை அறிந்துகொள்ளுதல்

முதல் நாள் வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விலைக்கிரயத்தைப்

பற்றிப் பேசும் முன்னர், இந்தியாவில் உள்ள முக்கிய தேவைகளை அறிந்துகொள்வதில்

கவனம் செலுத்துவோம்.

இந்தத் தேவைகளை விளக்கும் புள்ளிவிவரத்தை முதலில் பார்த்து, பின்னர்

மாற்றத்திற்கான அவசியத்தைப் பற்றி யோசிப்போம்.

முக்கிய புள்ளிவிவரம்:

1. இந்தியாவில் உள்ள 90% கிராமங்களில் சபைகள் இல்லை: கிராமப்புறங்களில்

கிறிஸ்தவர்கள் மிகக் குறைவாக இருப்பதையும், அது சுவிசேஷம் பரவுவதைப்

பாதிக்கும் விதங்களையும் கவனியுங்கள்.

2. இந்தியாவில் 2,279 மக்கள் கூட்டங்கள் இன்னும் சுவிசேஷத்தைக்

கேட்கவேயில்லை: ஜோஷுவா செயல்திட்டத்தின்படி, இந்தியாவில் குறிப்பிடத்தக்க

எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் சந்திக்கப்படாமல் இருக்கிறார்கள்,

அவர்களுக்கு இரட்சிப்பின் செய்தியைக் கேட்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.

சந்திக்கப்படாதவர்களின் உலகத்தில் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70,000 பேர்

சுவிசேஷத்தைக் கேட்காமலேயே மரிக்கிறார்கள் என்பது நமக்கு விழிப்பை

ஏற்படுத்துவதாக இருக்கிறது.

3. வேதாகம மொழிபெயர்ப்புகள் குறைவு: இந்தியாவில் 1,600 தாய்மொழிகளும், 700

மொழி வழக்குகளும் இருந்தாலும், 52 மொழிகளில் மட்டுமே வேதாகமம் முழுமையாக

மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரவருடைய சொந்த மொழிகளில் திறம்பட

வேதவசனங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாததால் எவ்வளவு பெரிய சவால்கள்

இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

4. உலகத்தில் உள்ள சந்திக்கப்படாத மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி

இந்தியாவில் உள்ளன: இந்தியாவில் சந்திக்கப்படாத ஏராளமான மக்கள்

கூட்டங்களையும், அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்வதன்

முக்கியத்துவத்தையும் பற்றி யோசித்துப் பாருங்கள்.

5. இயேசுவின் இரண்டாம் வருகை – மத்தேயு 24:14: மத்தேயு 24:14 வசனத்தை

தியானியுங்கள். அவ்வசனம் கிறிஸ்துவின் வருகைக்கு உலகெங்கும் சுவிசேஷம்

அறிவிக்கப்படுவது ஒரு நிபந்தனையாக இருப்பதைச் சுட்டிக் காண்பிக்கிறது. இந்தத்

தீர்க்கதரிசனம் நிறைவேறுவதிலும், சந்திக்கப்படாதவர்களைச் சந்திக்க வேண்டிய

அவசியத்திலும் நாம் கொண்டிருக்கும் பங்கை மனதில் கொள்ளுங்கள்.

மாற்றமும், விலைக்கிரயமும்:

உலகத்தைச் சந்திப்பதற்கு விலைக்கிரயம் செலுத்த வேண்டும்; மாற்றமே நாம்

ஏற்றுக்கொள்ள வேண்டிய விலைக்கிரயமாக இருக்கிறது.

இந்தத் தேவைகளை பயனுள்ள விதத்தில் சந்திக்க மாற்றம் அவசியம்.

அதற்காக, நம் முன்னுரிமைகளிலும், பொருளுதவிகளிலும், தனிப்பட்ட

அர்ப்பணிப்பிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்.

இயேசுவின் சீஷர்களாகிய நாம் மாற்றத்தின் தூதுவர்களாகவும், பிரதான கட்டளையை

நிறைவேற்றுவதில் முனைப்புடன் பங்குபெறுகிறவர்களாகவும்

அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அதற்கு, பொருளுதவிகளை திசைதிருப்புவதும், ஊழிய அணுகுமுறைகளை மறு

மதிப்பீடு செய்வதும், நம் வாழ்க்கைமுறையை மறுவடிவமைப்பு செய்வதும்,

சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்வதில் தியாகமாகப் பங்கேற்பதும் அவசியமாக

இருக்கிறது.

மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், இந்தியாவில் சந்திக்கப்படாதவர்களை சந்திப்பதிலும்

நம்முடைய பங்கைப் பற்றி சிந்திப்போம்.

சற்று நேரமெடுத்து, இந்தத் தேவைகளை அறிந்துகொள்ளவும், அதற்கேற்றபடி

செயல்பட நம்மை வழிநடத்தவும் உதவுமாறு தேவனிடம் ஜெபிப்போம்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

விலைக்கிரயம்

இந்தியாவில் சந்திக்கப்படாத மக்களைச் சந்திப்பதில் கவனம் செலுத்தும் இந்த வேதாகமத் திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இந்தியாவின் முக்கியத் தேவைகளை அறிந்துகொள்வதில் தொடங்கி, அவற்றைச் சந்திப்பதற்கான விலைக்கிரயத்தையும், தேவன் தம் ஜீவனையே பலியாகக் கொடுத்து செலுத்திய நிறைவான விலைக்கிரயத்தையும் பற்றி இதில் பார்ப்போம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Zeroக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.zerocon.in/