"இயேசுவைப் போல" பரிசுத்தமாக்கப்படுவது - ஒரு மகிமையான வழியாகும்மாதிரி

"இயேசுவைப் போல" பரிசுத்தமாக்கப்படுவது - ஒரு மகிமையான வழியாகும்

5 ல் 2 நாள்

"இயேசுவைப் போல" பரிசுத்தமாக்கப்படும் மகிமையான செயல்முறை பரிசுத்த ஆவியால் மட்டுமே உருவாக்கப்படும்.

யாத் 29:1 -ல் வேதம் கூறுகிறது, "அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி நீங்கள் அவர்களைப் பிரதிஷ்டை செய்ய நீ செய்ய வேண்டியது இதுதான்". யாத் 36: "அதைப் பிரதிஷ்டை செய்ய அபிஷேகம் செய்" என்று கூறுகிறது. யாத் 40:13 கூறுகிறது, "அப்பொழுது ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக."

I தெச 5:23 கூறுகிறது, "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.”

பரிசுத்தப்படுத்துதலின் நான்கு நிலைகள்:

பரிசுத்தப்படுத்துதலுக்கு மறுபிறப்பில் ஒரு திட்டவட்டமான ஆரம்பம் உள்ளது.

வாழ்நாள் முழுவதும் பரிசுத்தம் அதிகரிக்கிறது. மற்றும் இறுதியாக மரணத்தில் (நம் ஆத்துமாக்களுக்காக) தேவன் நம்மை பரலோக ராஜ்யத்திற்கு அழைக்கும் போது பரிசுத்தமாக்குதல் நிறைவடைகிறது.

பரிசுத்தம் என்பது இந்த வாழ்வில் நிறைவு பெறாது. இதுநம் உணர்வுகள். விருப்பம் மற்றும் ஆவி சார்ந்த நமது அறிவுத்திறனை உள்ளடக்கியது.

பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள் கிரியைச் செய்ய அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்:

நம் ஆத்துமாக்களில் தேவனின் இரட்சிப்பின் கிரியையின் தொடக்கத்தில் நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தப்படுத்தப்படுவதையும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை அன்றாடம் பயன்படுத்துவதையும் வேறுபடுத்திப் பார்ப்போம். தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தால் நாம் அன்றாடம் பரிசுத்தமாக்கப்பட வேண்டிய தேவையில் இருக்கிறோம். இது ஒரு முற்போக்கான கிரியையாகும், இது நாம் கர்த்தரைச் சந்திக்கும் வரை மற்றும் கிறிஸ்துவில் பரிபூரணமாக முன்வைக்கப்படும் வரை நம் வாழ்வில் தொடரும்.

கலா 5:16,18,25ல் “நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்.” இவ்வசனங்களில் உள்ள "ஆவியால்" என்ற சொற்றொடரை மீண்டும் மீண்டும் கூறி பரிசுத்த ஆவியின் பங்கை பவுல் எடுத்துக்காட்டினார். அவர் ரோம 15:16 இல் "பரிசுத்த ஆவியால் பரிசுத்தப்படுத்தப்பட்டார்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார், மேலும் ரோம 8:13 இல் "ஆவியால்" நாம் "சரீரத்தின் செயல்களை அழிக்க முடியும்" என்று கூறினார்.

பரிசுத்தமான மற்றும் தூய்மையான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம், பரிசுத்த ஆவியானவரின் ஊக்கமளிக்கும் வல்லமையை நாம் அறிந்திருக்கிறோம், எப்போதும் அதிகாரம் அளித்து, பரிசுத்தத்தின் ஒரு புதிய நிலைக்குத் வருகிறோம். நாம் கேட்க வேண்டியதெல்லாம், வேதாகமத்தின் நிருபங்களில் பரிசுத்த ஆவியின் வல்லமை பற்றி உள்ள ஏராளமான உதாரணங்கள் நமக்கு முன்மாதிரியாக இருந்து நம்மை வழிநடத்துவதாகும்.

அப் 1:8- “ பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”

நமக்காக மட்டுமின்றி, நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்காகவும், தேவனின் பரிசுத்தப் பணியின் நற்கிரியையை நம்மில் வெளிப்படுத்தும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான வல்லமையைப் பெறுகிறோம்.

பிரதிபலிப்புக் கேள்விகள்:

  1. ஒரு விசுவாசியின் வாழ்நாள் முழுவதும் பரிசுத்தமாக்கும் செயல்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு பங்கு வகிக்கிறார்?
  2. கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தால் அன்றாடம் பரிசுத்தமாக்குதலின் முக்கியத்துவம் என்ன?
  3. பரிசுத்த ஆவியின் அதிகாரம் விசுவாசிகள் பரிசுத்தமான வாழ்க்கையை வாழவும் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாகவும் இருக்க எவ்வாறு உதவுகிறது?
நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

"இயேசுவைப் போல" பரிசுத்தமாக்கப்படுவது - ஒரு மகிமையான வழியாகும்

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகரற்ற உதாரணமாகும்.. நாம் இயேசுவின் வாழ்க்கையை வேதத்தின் மூலம் ஆராய்ந்து பார்க்கும் போது பரிசுத்தமாக்குதலின் முக்கிய அம்சங்கள் எடுத்து காட்டப்பட்டுள்ளது. நாம் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வரவும், நிச்சயமாக பரிசுத்தமாகுதலை பூரணமாய் பெற்றுக்கொள்ள நாளடைவில் கூடும் என்பது நிச்சயம்

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://ruminatewithannie.in/