அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?மாதிரி

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

7 ல் 5 நாள்

கவலைக்கு முற்றுப்புள்ளி வை!

பெரும்பாலும் நமது துன்பங்கள் வார்த்தைகளிலிருந்து தான் தொடங்குகின்றன...ஆண்டவர் தம் வார்த்தையில் கூறுகிறார், "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்." (நீதிமொழிகள் 18:21)

வார்த்தைகள் நம்மை பரவச மகிழ்ச்சியால் நிரப்பலாம் அல்லது மாறாக, இருப்பதிலேயே மிக மோசமான உணர்ச்சி ரீதியான வலியை ஏற்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, நம் உரையாடல்கள் நேர்மறையானதாகவும், நம்பிக்கையும் ஊக்கமும் நிறைந்ததாகவும் இருந்தால், ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் நாள் முழுவதும் கடந்து செல்வோம். இதற்க்கு மாறாக, நம் உரையாடல்கள் மன அழுத்தத்திலிருந்து வரும் வார்த்தைகளால் நிறைந்திருந்தால், நாம் கவலையுடன் அந்த நாளின் நிகழ்வுகளை அணுகுகிறோம்.

தவறாக நடக்கக்கூடியவற்றைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகப் பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாக மன அழுத்தத்தின் அளவை அதிகரிக்கிறோம்... விசுவாசத்தின் அளவைக் குறைக்கிறோம்.

ஆனால் இந்த வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன? ஏன் சில நேரங்களில் அது மிகவும் எதிர்மறையாக இருக்கிறது?

மீண்டும் இங்கே தேவன் தம் வார்த்தையில் இதை நமக்கு வெளிப்படுத்துகிறார்: "...இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." (லூக்கா 6:45)

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன் உள்ளம் கவலையில் நிறைந்திருந்தால், உன் வார்த்தைகள் உன் கவலையை பிரதிபலிக்கும்.

யோபுவும் இதை கூறியுள்ளார் : "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது." (யோபு 3:25)

ஆண்டவரின் உண்மையுள்ள ஊழியனான யோபின் வார்த்தைகளின் மூலம் நாம் பார்க்கிறோம், அனைத்தும் முதலில் இதயத்திலும் எண்ணத்திலுமிருந்து தான் ஆரம்பிக்கிறது. சந்தேகம் மற்றும் பயத்தின் பிடியினால் நாம் கவலையுடனும், மன அழுத்தத்திலும் இருந்தால், நம் உள்ளம் வருத்தத்திலும், கலக்கத்திலும் இருக்கும். மேலும் நம் சிந்தனை எதிர்மறையான எண்ணங்களால் நிரப்பப்படும், இது நாம் செய்யப்படுவதைத் தடுக்கும், முன்னேறுவதைத் தடுக்கும், நம் சமாதானத்தை திருடி, சில சமயங்களில் நம்மை முடக்கவும் கூடும்!

உன் வாழ்க்கையின் சூழ்நிலை இப்படித்தான் இருக்கிறதா? அப்படியானால், விரக்தியடைய வேண்டாம், ஏனென்றால் ஆண்டவருடைய வார்த்தை சிறந்த ஆலோசனைகளால் நிரம்பி வழிகிறது.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு உன் அணுகுமுறையை மாற்றினால் என்ன நடக்கும்?

உன் மனநிலையை மாற்றினால் என்ன? அதிக நம்பிக்கையுடன், அமைதியுடன் அந்த சூழ்நிலையை அணுக முயற்சிப்பதன் மூலம்?

எப்படி இதைச் செய்வது? மிகவும் எளிமை, ஆண்டவரின் சமாதானத்தால் உன்னை நிரப்பும்படி கேட்கத் தொடங்குவதன் மூலம். பின்னர், ஊக்கம், ஆறுதல் மற்றும் விடாமுயற்சியின் வார்த்தைகளை உன் உள்ளத்தில் ஊற்றும்படி அவரிடம் கேள்.

அச்சங்கொண்டு பயப்படுவதற்கு பதிலாக, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரின் பாதத்தில் உன்னைப் பற்றிய அனைத்தையும் ஒப்புக்கொடுக்க நான் உன்னை அழைக்கிறேன். இன்று என்னுடன் இதைப் பற்றி ஜெபிக்க விரும்புகிறாயா?

“தந்தையே, எனக்கு உறுதியளிக்கும், உதவும், மீண்டும் தைரியத்தால் நிரப்பும் உமது வார்த்தைக்கு நன்றி. எப்பொழுதும் உமது வார்த்தையின் உண்மையைப் பறைசாற்றவும், மற்ற எதையும் விட என் கண்களை உம்மீது பதிக்கவும் நான் தேர்வு செய்கிறேன். என்னை பாரப்படுத்தும் இந்தக் கவலைகள் அனைத்தையும் நான் உம்மிடம் தருகிறேன். நீரே என் வழிகாட்டி, என் ஆறுதல், என் தலையை உயத்துகிறவர். உமது நாமமே போற்றப்படட்டும்! ஆமென்.”

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக XXக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=overcomestress