சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்மாதிரி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

13 ல் 11 நாள்

உன்னைக் காக்கிறவர் எழுவார்!

“என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும், பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.” (வேதாகமம், சங்கீதம் 27:12)

பகிரங்கமாகவும் அநியாயமாகவும் குற்றம் சாட்டப்படுவது மிகவும் கடினமான ஒரு விஷயம். இது எனக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 1ஆம் தேதி அன்று நடந்தது. புத்தாண்டை மகிழ்ச்சியோடும் சகோதர அன்போடும் தொடங்க சில நண்பர்களுடன் அமைதியான முறையில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என் மீது ஒரு இணையதளத்தில் ஒரு குற்றச் சாட்டுக் கட்டுரை வெளியாகி இருப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு போதகர் அந்தக் கட்டுரையை எழுதி, எங்கள் நேர்மை மற்றும் பிற விஷயங்களைக் கேள்விக்குள்ளாக்கினார். கட்டுரையில் ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருந்தன…

இது எனக்கு மட்டுமல்ல, என் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் மிகவும் வேதனையாக இருந்தது. மற்றும் எங்கள் அணியினரும் வேதனைப்பட்டார்கள்.. நாங்கள் கண்ணீரோடு ஆண்டவரைத் தேடினோம். நாங்கள் மன்னித்து, தீமையை நன்மையாக மாற்றி, எங்களை நாங்களே படுத்திக்கொள்ள முயன்றோம்.

உன் எதிரிகளின் விஷமமான ஆசைகளுக்கு உன் தந்தை உன்னை விட்டு விடமாட்டார் என்பதில் உறுதியாக இரு. வன்முறையை மட்டுமே சுவாசிக்கும் பொய்சாட்சிகள் உனக்கு எதிராக எழலாம், ஆனால் வேறு ஒருவரும் கூட உனக்காக எழப் போகிறார்! அவர் தான் உன் மீட்பர்... அவர் உனக்காக எழுவார். அவர் இயேசு கிறிஸ்து, அவர் இரக்கத்தையும் அமைதியையும் மட்டுமே சுவாசிக்கிறார்.

இயேசு உன்னைக் காப்பவர். அவர் எழுந்திருந்து இறுதி முடிவை எடுப்பார்!

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம் 27ன் வழியாக ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார்

சங்கீதம் 27 தாவீதின் ஒரு அற்புதமான சங்கீதம், இதில் உள்ள வசனங்களின் ஆழங்களை அறிவது சாலச்சிறந்தது மற்றும் இது நிச்சயமாக உன்னை ஊக்குவிக்கும்! அடுத்த சில நாட்களில் இதை தொடர்ந்து வாசி… ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=psalm27