சமாதானத்தை நாடுதல்மாதிரி
நம்முடன் சமாதானத்தில் இருத்தல்
அநேக நேரம் சமாதானத்திற்கான மிகப்பெரிய போராட்டம் நமக்குள்ளே நடக்கிறது. பேரனுக்கு ஒரு முதியவர் சொன்னதாக ஒரு கதை உண்டு, "என் இருதயத்தில் இரண்டு ஓநாய்கள் சண்டை போடுகிறது. ஒன்று உக்கிரமான கோபத்துடன் பழிவாங்கும் குணத்தை கொண்டது. மற்றொன்று அன்பும் இரக்கமும் கொண்டது. "இருதயத்தில் எந்த ஓநாய் வெற்றிப்பெறும்?" என்று பேரன் அவரிடம் கேட்டான். அதற்கு முதியவர், "நான் உணவளிக்கும் ஓநாய்" என்பதாக சொன்னார்.
நமது அத்துமாவிற்கு என்ன உணவளிக்கலாம் என்று நாமே முடிவெடுக்கிறோம். உங்களை பற்றி உங்களுக்கு என்ன எண்ணங்களை கொண்டுள்ளீர்கள்? நாம் தினமும் எந்த அளவிற்கு கவலைகளை கவனமாக எதிர்கொண்டு வாழ்கிறோம் என்பதை பொறுத்தது. நம்முடைய அறிவிற்கு அப்பால் இருக்கும் கவலைகளை நம் தேவனிடம் விட்டு அவரே நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் ஆளுகை செய்திட அனுமதித்து நமக்குள் இருக்கிற சமாதானத்தை கண்டறிய வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது.
ஆப்பரிக்க பழமொழிகள்:
சிறுத்தையின் தோல் அழகுள்ளது, ஆனால் அதனுடைய இருதயம் அப்படி அல்ல. ~ பளுபா பழமொழி
நாம் உடுத்தும் உடையை வைத்து நாம் அறியப்படுகிறோமா என்பதை பற்றிய ஒரு சவாலான கட்டுரை டியர்பண்டினுடைய (Tearfund) சந்த தளத்தில் இருக்கிறது, வாசித்துப்பாருங்கள்.
செயல்: நாம் நம்முடைய பொருட்களிலும் உடமைகளிலும் அடையாளம் கண்டடைகிறோம். உங்களுக்கு பிடித்த துணிக்கடைக்கு செல்லுங்கள். எதையும் வாங்க அல்ல, உங்களுடைய தேவை என்ன என்பதை சிந்திக்க ஒரு தருணத்தை கொண்டிருக்க. தேவன் நம்மை அவருடைய நீதியை சால்வையாக போர்த்தியமைக்கு ஒரு நன்றி பலியை தேவனுக்கு செலுத்துங்கள். தேவன் உங்களை அந்த தருணத்தில் சந்திக்க வேண்டும் என்று சொல்லி வெறும் கையுடன் அந்த கடையை விட்டு தேவன் ஒருவரே கொடுக்க வல்ல ஒரு காரியத்தை தேடி சென்றதாக அறிந்து வெளியேறுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
Tearfund நிறுவனம் , எப்படி சமாதானத்தின் குரலாகவும், உறவுகள் மீண்டும் சேர்க்கவும், உலகம் முழுவதும் சமூகங்கள் மத்தியில் ஒற்றுமையை முற்படுத்தி, தேவனுடைய வழிநடத்துதலை தேடுகிறது.இந்த 7 நாள் ஆய்வு, உங்கள் சொந்த உறவுகளை மீட்டெடுப்பதற்கும், அன்றாட நடவடிக்கைகளான, நாம் வாழும் உலகத்திற்காக பிரார்த்தனை செய்வதற்கும் . ஆப்பிரிக்கா பழமொழிகளிலிருந்து செழிப்பான ஞானத்தைப் பயன்படுத்தி, தேவனுடைய உண்மையான சமாதானத்தைக் கண்டுபிடிக்க உதவும்.
More