BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

28 ல் 26 நாள்

அகாப்பே அன்பு மக்களுக்கு முதலில் ஏற்படும் ஒரு உணர்வு அல்ல. அது செயல்படும் அன்பு. பிறருடைய நல்வாழ்வுக்காக மக்கள் செய்யும் தெரிந்தெடுப்பு இது. அப்போஸ்தலன் பவுல், அவருடைய ஒரு நிருபத்தில், ஆவிக்குரிய அறிவு அல்லது விசேஷித்த திறன்களைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அன்பு மிகவும் முக்கியம் என்றும், அது இல்லாமல் உண்மையில் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். அன்பு எப்படி நினைக்கிறது மற்றும் நடந்துகொள்கிறது என்பதை அவர் சரியாக விவரிக்கிறார்.

வாசிக்கவும் : 

1 கொரிந்தியர் 13: 1-7

சிந்திக்கவும் :

1 கொரிந்தியர் 13: 4- 7 ஐ ஒரு காகிதத்தில் எழுதுங்கள். உங்கள் சொந்த கையெழுத்தில் வசனங்களை எழுதுகையில், குறிப்பாக உங்களுக்கு என்ன வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் முக்கியமாக தோன்றுகின்றன?

அன்பின் எந்த அம்சங்களில் நீங்கள் அதிகம் வளர வேண்டும்? தேவனிடம்  சொல்லி அவரிடம் உதவி கேளுங்கள்.

அன்பை பற்றி பவுல் சொல்லும் விளக்கத்தை பயன்படுத்தி, இயேசு உங்களை எப்படி நேசித்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக, இயேசு உங்களுக்கு எப்படி பொறுமையாக, கனிவாக, தாழ்மையுடன், தன்னலமற்றவராக இருந்தார்?

இன்று தேவன் உங்களை நேசிக்கிறார் என்ற நினைவூட்டல் யாருக்கு தேவை? இந்த வாரம்,  இயேசு எப்படி உங்கள் மூலமாக அவர் அன்பை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்? அதைப் பற்றி ஜெபிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஜெபம் செய்யும் போது மனதில் தோன்றும் யோசனைகளைக் எழுதிவைத்துக்கொள்ளுங்கள், இந்த வாரம் அவருடைய அன்பை தீவிரமாகப் பகிர்ந்து கொள்ளத் திட்டமிடுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 25நாள் 27

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com