BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி
வேதாகம நம்பிக்கை என்பது தேவனின் குணாதிசயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, அதாவது எதிர்காலம் நிகழ்காலத்தைவிட சிறந்ததாக இருக்கும் என்று நம்புவதாகும். தேவனின் தன்மையை அல்லது குணாதிசயத்தை ஒரு நபர் எவ்வளவு அதிகமாக அறிந்துக் கொள்கிறாரோ, அவ்வளவாய் அவருக்கு நம்பிக்கை இருக்கும்.
வாசிக்கவும்:
சங்கீதம் 130 : 1 - 8
சிந்திக்கவும்:
தேவனின் குணாதிசயத்தைப் பற்றி சங்கீதக்காரன் என்ன சொல்கிறான்?
தேவனின் குணாதிசயத்தைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தேவன் இஸ்ரவேலுக்கு என்ன செய்யப் போகிறார் என்று சங்கீதக்காரன் நம்புகிறான்?
உங்களுக்கும் உங்கள் சமூகத்திற்கும் தேவன் என்ன செய்வார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
இந்த வாரம் உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் சமூகத்திலும் தேவனின் மன்னிக்கும் அன்பை நீங்கள் எவ்வாறு பார்க்க விரும்புகிறீர்கள்? இப்போது உங்கள் பதிலை அவரிடம் ஜெபமாக ஏறெடுங்கள். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com