நான் புறம்பே தள்ளுவதில்லைமாதிரி
மனிதர்களிடம் அல்ல : என்னிடத்தில் வருகிறவனை தள்ளுவதில்லை...
இன்றைய நிலை கிறிஸ்தவர்கள் பல ஊழியர்களை நம்பி கூட்டங்களுக்கும், சபைகளுக்கும் செல்கின்றனர். இதினிமித்தம் கிறிஸ்துவின் மேல் வீசப்பட்ட அவமானக் கற்கள் கொஞ்சமல்ல.
அநேக புறஜாதிகள் சில விசுவாசிகளை நம்பி பல ஊழியர்களிடம் சென்று இயேசுவை விட்டு பின் வாங்கியுள்ளனர். இதிலும் சிறப்பானது சில விசுவாசிகளே பல விசுவாசிகளை ஊழியர்களினிமித்தம் சோர்வுக்கு உள்ளே தள்ளி பின்வாங்கும் நிலையை அடைய செய்துள்ளனர்.
பல ஊழியர்களும் விசுவாசிகளை தங்களின் சாட்சியற்ற நடவடிக்கையால் கிறிஸ்தவர்களை கிறிஸ்துவிடமிருந்து பிரித்து விட்டார்கள். இவைகளுக்கெல்லாம் சிறந்த உதாரணம் வேதத்தில் பல இருந்தாலும் ஒரு காரியத்தை காண்போம்.
இயேசுவையும், சீஷர்களையும் நம்பினவனாக வந்த ஒரு பிள்ளையின் தகப்பன். இயேசுவின் சீடர்களிடம் தன் பிள்ளையை விடுகிறான். அவர்களால் பிசாசை துரத்த முடியவில்லை. அந்த தகப்பனின் விசுவாசம் ஆட்டம் கண்டு விட்டது.தன் இருதயத்தில் சோர்ந்து போனான். [மாற்கு 9:14-27]
இவனின் சோர்வுக்குக் காரணம், தகப்பனானவன் சீடர்களை நம்பினான். ஆகவே, இயேசு வந்தபோது, "நீர் ஏதாகிலும் செய்யக் கூடுமானால்" என்று கூறுகிறான். இயேசுவை முழுமையாக தகப்பனால் விசுவாசிக்க முடியவில்லை.
இயேசு அவனை நோக்கி, 'நீ விசுவாசிக்கக்கூடுமானால்' என்று சொல்கிறார். உடனே தகப்பன் தன் நிலை அறிந்து 'விசுவாசிக்க உதவும்' என்று கூறுகிறான். இவனின் இந்த நிலைக்கு இரண்டு காரணம். ஒன்று இவன் சீஷர்களை முழுமையாக நம்பினது. இரண்டாவது இயேசுவை முழுமையாக நம்பாதது.
கவனியுங்கள்..! இயேசுவை மட்டுமே முழுமையாக நம்பினீர்களானால் எளிதில் எதையும் பெறலாம் என்பதனை எங்கும் எப்போதும் மறவாதீர்கள்... ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசுவானவர் மட்டுமே தன்னிடத்தில் வருகிறவனை புறம்பே தள்ளுவதில்லை. தன் ஆஸ்திகள் அனைத்தையும் அழித்த கெட்டக் குமாரனை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாயிருந்தவர். உங்களை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. அவரையே மீண்டும் நம்பி செல்லுங்கள். உங்களை அனைவர் மத்தியிலும் மீண்டெடுப்பார்...
More
இந்த திட்டத்தை வழங்கிய கடவுளின் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/kog.vlog