உண்மைக் கர்த்தர் மாதிரி
கர்த்தர் பரிசுத்தர்
பரலோகத்தில் தேவதூதர்கள் தொடர்ந்து “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” (ஏசாயா 6:3) என்று சொல்லிக்கொண்டே இருக்கும் காட்சியை விவரிக்கிறார் ஏசாயா. கர்த்தர் நல்லவர், அவர் இறையாண்மை உள்ளவர் என்று நாம்அறிந்திருக்கிறோம். அவர் பரிசுத்தராக இருக்கிறார் என்பதற்கு பொருள் என்ன?
கர்த்தரின் பரிசுத்த தன்மை என்பது, பாவம், குறை மற்றும் தீமையின் சிறு துரும்பு கூட எட்ட முடியாத நிலையாகும். இது தான் பரிசுத்தம் என்றசொல்லின் பொருளாகும். கர்த்தரைத் தனித்தன்மையுள்ளவராக வைத்திருக்கும் மறைமுகமான அம்சங்களில் ஒன்று இதுவாகும். அவரைப் போன்று யாருமே இல்லை.
அவரது பிள்ளைகளாகிய நாம், அவரைப் போலவே பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க - கர்த்தரைப் போலவே தூய்மையாக, பரிபூரணமான தன்மையாக மாற அழைக்கப்படுகிறோம்.
“பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத்தரிசிப்பதில்லையே.” (எபிரெயர் 12:14).
இது எப்படி சாத்தியமாகும்? இது சாத்தியமல்ல. நம்மை சுத்தமாக்கும்கிறிஸ்துவின் சிலுவை இல்லாமல் இது சாத்தியமில்லை. நாம் பாவத்தால்கறைபட்டிருக்கிறோம். நாம் கர்த்தரின் பிரசன்னத்தில் நிற்கவே முடியாது. அவரது குணத்தைப் போல மாறுவது நிச்சயமாக சாத்தியமே இல்லை. பரலோகம் செல்வதற்கு அவரே நமக்குத் தரும் வழியை அல்லாமல் நமக்கு வேறு வாய்ப்பே இல்லை: தேவ குமாரனாகிய, இரட்சகர் இயேசுவின் தியாகமான ஈவு தான் அந்த வழி.
நமது பாவங்களின் பட்டியலை அழித்துவிடும்படியாக “அழி” என்னும் பொத்தானை அழுத்தியதற்கு ஒப்பானதாகும். நமது வாழ்வின் மீதப் பகுதி அனைத்துமே பரிசுத்தமாக்கப்படும் தொடர் நிகழ்ச்சியே ஆகும். அவர் ஏற்கனவே நமக்கு வைத்திருக்கும் பரிசுத்தத்தை வாழ்ந்து காட்டுவது தான் அந்த வாழ்வு.
உண்மையான கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். அவருடன் நெருக்கமான உறவைப் பெற்றுக் கொள்வதற்காக - நாமும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். உங்கள் வாழ்வை கிறிஸ்துவுக்கு என்று அர்ப்பணித்துவிட்டீர்களா? அதன் மூலமாக அவரைப் போலவே மறுரூபம் அடைந்து அவருடன் நடக்க முடியும்.
கர்த்தரின் பரிசுத்தத்தைப் பற்றிய ஒரு தெளிவான காட்சியானது உங்களது மனப்பாங்குகளை வடிவமைத்து, உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும். கர்த்தருடன் ஒரு நெருக்கமான ஐக்கியத்தையும் அது உங்களுக்குக் கொடுக்கும். காலம் செல்லச் செல்ல உங்கள் வாழ்க்கையானது அவரது நன்மையான, இறையாண்மையுள்ள, பரிசுத்த குணத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போல மாறும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நீங்கள் கர்த்தரை எவ்வாறு காண்கிறீர்கள்? இதற்கான பதிலானது உங்களையும், உங்கள் விசுவாசத்தையும், உங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையும், மனப்பாங்குகளையும், உறவுகளையும், இலக்குகளையும் - உங்கள் முழு வாழ்க்கையையும் வனைகின்றது. கர்த்தரைப் பற்றிய தவறான கண்ணோட்டம் வாழ்வின் போராட்டங்களிலேயே உழன்று கொண்டிருக்க வைக்கும். உண்மையான கர்த்தரை நாம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அது ஞானமுள்ள செயல். அதனால் உங்களது வாழ்க்கையும் வல்லமையான வழியில் மாற்றம் பெறும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய லிவிங் ஆன் தி எட்ஜுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: https://livingontheedge.org/