இயேசு என்னை நேசிக்கிறார்மாதிரி
நீங்கள் ஏன் இதை வாசிக்க வேண்டும்?
இயேசு சொன்னார், “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்" (யோவான் 10:10). நம் ஆத்துமாக்களில் ஜீவனை தரவே இயேசு வந்தார். நாம் உலகை விட்டு போகும்போது கர்த்தரோடு பரலோகத்தில் இருக்கும்படி நமக்கு நித்திய வாழ்வை தரவே இயேசு வந்தார். அவரை விசுவாசித்து இரட்சிப்பை பெற்றுக் கொள்ளுகிற யாவருக்கும் வாழ்வை தரவே இயேசு வந்தார்.
நாம் எங்கெல்லாம் நம் தவறுகளில் மரித்திருக்கிறோமோ, அங்கெல்லாம் திரும்ப வாழ்வை தரவே இயேசு நம் உலகத்திற்குள் வருகிறார். எல்லா மனிதர்களும்—அனைத்து மதத்தாரும், வெவ்வேறு நம்பிக்கை உடையவரும், எவ்விய பின்னணி உடையவரும்—இயேசு தருகிற உறவை வாஞ்சிப்பார்கள். நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க, இயேசு மனுக்குலத்திற்கு வந்தார்.
ஒரு கிறிஸ்தவனாய், இந்த இயேசுவை தான் விசுவாசிக்கிறோம்—ஏதோ இயேசு என்று பெயரிடப்பட்ட நல்ல மனிதனையோ அல்லது எழுச்சியூட்டக்கடிய போதகரையோ அல்ல. நாம் மனிதனாக வந்த தேவனாகிய இயேசுவை விசுவாசிக்கிறோம், உலகத்தின் பாவத்திற்காக சிலுவையில் மரித்து உயிர்த்த மேசியாவை விசுவாசிக்கிறோம்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டாலும், இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க உதவுவதே எனது நோக்கம், ஒரு கிறிஸ்தவனாக நான் எதை விசுவாசிக்கிறேன்? ஏனெனில் அனேகர் கிறிஸ்தவத்தை தங்கள் கருத்தை கொண்டு விளக்குகிற உலகில் நாம் இருக்கிறோம், கிறிஸ்தவத்தின் அவசிய நம்பிக்கைகள் மாறாத சத்தியங்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த விதிமுறைகள் மூலமாகவே இயேசுவின் மன்னிப்பையும் வாழ்வையும் பெற்றுக் கொள்ளுகிறோம். இந்த விதிமுறைகள் தேவனால் கொடுக்கப்பட்டவை, மனிதனால் அல்ல.அவைகள் மாறாதது, நம் எல்லாராலும் புரிந்து கொள்ளகூடியது.
உறுதியான எல்லா வீட்டின் கீழும், நாம் கானாத அஸ்திபாரம் முழு கட்டிடத்தையும் தூங்கிக்கொண்டு இருக்கிறது. நம் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு இது அத்தகைய அஸ்திவாரத்தை இடும். இந்த அவசியமான நம்பிக்கைகளில் ஒன்றை தவறவிட்டாலும் நமது வீடு முழுமையாக இடிந்துவிடும்.
உறுதியாக சொல்கிறேன், இந்த அவசியமான கிறிஸ்தவ போதகத்தை உங்கள் விசுவாசத்தின் அடிப்படையாக வையுங்கள், தேவன் நிலையான மற்றும் பிரோயஜனமான வாழ்க்கையை கட்டி எழுப்புவதை நீங்கள் காண்பீர்கள். தேவ வார்த்தை இந்த அடிப்படை உண்மைகளை விளக்குகிறது. இந்த திட்டம் உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையின் அஸ்திவாரத்தை சோதிக்க உதவும்—எனவே நீங்கள் சிறப்பான விசுவாச வாழ்க்கையை கட்ட முடியும். தேவன் வேதத்தில் என்ன சொல்லியிருக்கிராறோ அதை விசுவாசித்து கீழ்படிவதின் மூலமாக வளர்கிறோம். கிறிஸ்துவை நேசிப்பதிலும், நாம் நம்புவதைப் பற்றி அதிக நம்பிக்கையுடனும், நம்முடைய நல்ல தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு மேலும் உறுதியுடன் இன்றைய திட்டத்தின் முடிவில் வருவோம்.
இந்த கேள்விக்கு நீங்கள் எப்படி பதில் அளிப்பீர்கள், "ஒரு கிறிஸ்தவனாக நான் எதை விசுவாசிக்கிறேன்?"
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யாரோ ஒருவர், "நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?" என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.
More