வேதாகமத்தை எப்படி வாசிக்க துவங்குவதுமாதிரி

தேவனுடைய வார்த்தையின் மூலம் அவரை விசுவாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்
தேவனை வெளிச்சத்தில் நம்புவது ஒன்றும் இல்லை. ஆனால் இருளில் அவரை நம்புவதுதான் விசுவாசம் - சார்ள்ஸ் ஸ்பர்ஜன்
வேதவாசிப்பை அனுதின பழக்கமாக்கி அந்த சத்தியத்தை நடைமுறை படுத்துவது தேவனோடு நம்முடைய உறவை அளவற்றவிதத்தில் அதிகரிக்கும். ஆனால் சிலவேளைகளில், அல்லது அனேகவேலைகளில் வேதாகமம் கிரியைசெய்யாததுபோல தோன்றும். நாம் வாழ்க்கையில் செல்லும் வழியில் அது உதவாதது போல தோன்றும். உண்மையை சொன்னால், நாம் விரும்புவதை, கேட்பதை தராததினால், தேவன் நல்லவரென்று தோன்றாமல் போகக்கூடும்.
தேவனுடைய வார்த்தைக்குள்ளாக செல்லும்போது, அவருடைய பரிபூரண மனதில் நமக்காக சிறந்தததையே கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்வோம். ஆனால் அது அவருடைய சிறந்தது, நம்முடையதல்ல. அவர் எல்லாவற்றையும் அறிந்தவராய் எது எப்போது நமக்கு தேவை என்று அறிந்திருக்கிறார். அவருடைய தன்மையை அறிந்துகொள்ளும்போது நாம் தேவனை விசுவாசிக்க துவங்குகிறோம்.
ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை வாசித்து நடைமுறைப் படுத்தும்போது அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு அவர் உண்மையுள்ளவராக இருப்பதினால் அவரை அதிக அதிகமாய் விசுவாசிப்போம். அவர் வேதாகமத்தில் நமக்காக அநேக வாக்குகளை வைத்திருக்கிறார், அவைகளை நாம் வாசிக்கும்போது நமக்குள்ளாக நம்பிக்கையை அது விதைக்கும். அவைகளில் சிலவற்றை நாம் பாப்போம்.
...நாம் பாவங்களை அறிக்கைசெய்தால், அவர் நம்மை மன்னிப்பார். (1 யோவான் 1:9)
...வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்து அவரிடத்தில் நாம் வந்தால் நமக்கு இளைப்பாறுதலை தருவார். (மத்தேயு 11:28-29)
...நாம் அவரை பின்பற்றினால், நாம் இருளில் நடக்கமாட்டோம். (யோவான் 8:12)
...அவரில் நிலைத்திருந்தால், நாம் அதிக கனிகொடுப்போம். (யோவான் 15:5)
...நாம் ஞானத்தில் குறைவுப்பட்டால், அவர் அதிகமாய் நமக்கு தருவார். (யாக்கோபு 1:5)
...இயேசுவே தேவன் என்று நம்பி அறிக்கைசெய்தால், நாம் இரட்சிக்கப்படுவோம். (ரோமர் 10:9)
நாம் வாசிக்கும் காரியங்களில் சில அதிக அர்த்தம் கொண்டதாக இருக்காது, ஆனாலும் பாஸ்டர் அண்டி சொல்வதுபோல், “ஒன்றை நம்புவதற்கு எல்லாவற்றையும் புரிந்துகொள்ள தேவையில்லை.” நாம் அவரை அதிகம் தேடும்பொழுது, இன்னும் அதிகம் அவரை அறிந்துகொள்கிறோம். அவரை அதிகம் அறிந்துகொள்ளும்போது, அதிகம் விசுவாசிக்கிறோம். வேதம் வாசிப்பதை நம்முடைய நாளின் ஒரு பங்காக மாற்றும் போது, அவரை நம்முடைய வழிகாட்டியாக, ஞானம் கொடுப்பவராக, அமைதி கொடுப்பவராக, நம்பிக்கை தருபவராக மற்றும் சமாதானம் தருபவராக அறிந்துகொள்வோம்.
தியானி
- தேவனையும் அவர் வார்த்தையையும் நீ நம்புகிறாயா? எது உன்னை அவ்வாறு செய்யாமல் தடுக்கிறது?
- உன்னுடைய பயன்களை தேவனிடம் சொல்ல கொஞ்சம் நேரத்தை செலவிடு. அவர் அவைகளை முன்னமே அறிந்திருக்கிறார், அதை மறைக்காதே. பின்னர், இவை எல்லாவற்றிலும் அவரை நம்ப உதவி கேள்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உண்மையை ஏற்றுக்கொள்வோம்.: நாம் வேதாகமத்தை வாசிப்பது நல்லது என்று உணருகிறோம், ஆனால் எங்கு வாசிக்க துவங்குவது என்று தெரியாமல் இருக்கிறோம். இனி வரும் நான்கு நாட்களில், வேதாகமம் ஏன் முக்கியமானது என்றும், எவ்வாறு தினந்தோறும் வேதத்தை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்குவது என்றும், நம் வாழ்வில் அது எவ்வாறு உதவும் என்றும் நாம் கற்றுக்கொள்வோம்.
More