பயத்தை மேற்கொள்ளுதல்மாதிரி
![பயத்தை மேற்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15671%2F1280x720.jpg&w=3840&q=75)
பயத்தை மேற்கொள்ளுதல் - நன்றியறிதலுள்ள இருதயத்தோடு இருத்தல்
கொலோசெயிலுள்ள திருச்சபைக்கு பவுல் புத்திமதி கூறுகையில், “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” என்கிறார்.
இந்த வார்த்தை மெய்யாகவே, என்னோடு பேசியது. காரணம் நம்மில் அநேகர் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, தொழிலுக்காக, நிருவனத்திற்காக பணிபுரிகிறோம். தேவன் நமக்கு சொல்லும் காரியம் என்னவென்றால், நாம் எதைச் செய்தாலும், அதை தேவனுக்காகவே செய்கிறோம் என்கிற சிந்தையோடு செயல்பட வேண்டும். நாம் செய்யும்வேலையில், எப்படிப்பட்ட பிரதிபலன் கிடைத்தாலும், தேவன் என்னை நேசிக்கிறார் என்பதை எனக்கு அர்த்தப்படுத்துகிறது. நீங்களும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், தேவன் உங்களையும் நேசிக்கிறார் என்பதை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்.
ரோமர்.8.28ல் எழுதியிருக்கிறபடியே “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”
நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நீங்கள் அவரிடத்தில் அன்புகூருகிறபடியினால், சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கிறது.
என்னுடைய அனேக வேலைப்பலுவின் நிமித்தம், அதிகமான நேரத்தை பிரயாணத்திலேயே செலவழிப்பதினால், ஸ்கைப் மூலமாக பலரோடு நான் தொடர்புகொள்வதுண்டு. இப்படி நான், சமீபத்தில் ஸ்கைப் மூலமாக சந்தித்த ஒரு நண்பரின் கேள்வி, என்னுடைய வாழ்க்கையை மாற்றினது. அந்தத் தருணத்தில், “தேவன் எனக்கு தந்த அனைத்து ஆசீர்வாதங்களையும் என்னால் அனுபவித்து அதில் மகிழ முடிகிறதா”? என கேட்டார். என் நண்பர் கேட்ட கேள்வியின் உள்ளான அர்த்தத்தை என்னால் முதலில் புரிந்தகொள்ள முடியவில்லை. அந்தஷணத்தில், அவர் கேட்டது: என் வாழ்க்கையில் நான் எங்கு இருக்கிறேன்? நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? மற்றும் நான் செய்வது எனக்கு பிடித்திருக்கிறதா? என்று கேட்டார்.
அவர் கேட்ட கேள்வியை நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன். நான் ஒரு கிரிக்கெட் வீரர். நான் அதிகமாக பிரயாணம் செய்கிறேன். ஆனால், என்னுடைய வேலை என்னை அழைத்துசெல்லும் இடமெல்லாம், நான் உண்மையாகவே மகிழ்கிறேனா? என்னுடைய நேர்மையான பதில், “இல்லை” என்பதே. ஏனென்றால், சில நேரங்களில் பயத்தையும், கவலையையும், சந்தேகத்தையும், மக்கள் என்னைக் குறித்து சொல்லும் கருத்துக்களையும் நான் என் வாழ்க்கையில் அனுமதித்திருக்கிறேன்.
ஆனால் தேவன் எனக்கு அருளிய ஆசீர்வாதத்தை நான் அனுபவிக்கிறேனா என்கிற அவருடைய கேள்வியை கேட்டபோது, என்னுடைய அச்சங்களின் மீது நான் குறைவாக கவனம் செலுத்தினேன். என்னுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நான் அறிந்த காரணத்தினால், என்னுடைய திறமையைக் குறித்து குறைந்த அளவிலேயே கவனம் கொள்கிறேன். நான் கிரிக்கெட் ஆடுகளத்தில் நான் நடந்துசெல்லும்போது, தேவனை மகிமைப்படுத்துவதையே சிந்திப்பேனே ஒழிய, நான் எவ்வளவு ரன்கள் எடுக்கிறேன், எடுக்கவில்லை என்பதை நான் சிந்திப்பதில்லை. என்னுடைய பெயரையோ அல்லது என் அணியின் பெயரையை மகிமைப்படுத்துவதைவிட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதையே மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![பயத்தை மேற்கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F15671%2F1280x720.jpg&w=3840&q=75)
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜெ.பி.டுமினி, பயத்தை எதிர்கொண்டு மேற்கொள்ளுதல் பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுகிறார். நாம் அவருக்கு பயப்படும் பயத்தை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய உண்மையான மதிப்பையும் தகுதியையும் புரிந்துகொண்டு, சர்வ வல்லமை பொருந்திய சிருஷ்டிகராகிய தேவனை நோக்கிப் பார்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
More
இந்த திட்டத்தை வழங்கிய JP Duminy க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://jp21foundation.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![Walk With Jesus - நம்முடைய ஆறுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16055%2F320x180.jpg&w=640&q=75)
Walk With Jesus - நம்முடைய ஆறுதல்
![நம்பிக்கையின் குரல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F19667%2F320x180.jpg&w=640&q=75)
நம்பிக்கையின் குரல்
![உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F20517%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்
![மறுரூபமாக்க மறுரூபமாகு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F18414%2F320x180.jpg&w=640&q=75)
மறுரூபமாக்க மறுரூபமாகு
![கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F22146%2F320x180.jpg&w=640&q=75)
கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்
![கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F25512%2F320x180.jpg&w=640&q=75)
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
![உண்மைக் கர்த்தர்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24467%2F320x180.jpg&w=640&q=75)
உண்மைக் கர்த்தர்
![நான் புறம்பே தள்ளுவதில்லை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26850%2F320x180.jpg&w=640&q=75)
நான் புறம்பே தள்ளுவதில்லை
![இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F26874%2F320x180.jpg&w=640&q=75)
இயேசுவின் வழியில் ஜெபிக்கக் கற்றுக் கொள்ளுதல்
![உண்மை ஆன்மீகம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F24465%2F320x180.jpg&w=640&q=75)