கைவிடப்படவில்லை: ஒரு சரியான தந்தையின் மகன்கள் மற்றும் மகள்களாக சுதந்திரத்தைக் கண்டறிதல்மாதிரி
நாள் 3:
"நான் என் அப்பாவை _____ க்கு மன்னிக்கவே முடியாது."
நீங்கள் எப்போதாவது இதுபோல உணர்ந்தது உண்டா?."
ஒவ்வொரு மனித உறவுகளிலும், உறவை நீட்டிக்க மன்னிப்பை கோருவதும் பெருவதுமாய் இருந்து வருகிறது.
நமது பூமிக்குரிய அப்பாவிடமும் எந்த வித்தியாசமும் இல்லை. மன்னிப்பை நாம் தேர்வு செய்யலாம் அல்லது உறவை முடிக்க தேர்வு செய்யாமலும் இருக்கலாம்.
நம்மை காயப்படுததியவர்களை மன்னிகாமல் இருப்பது மனதின் ஆக்ரோஷமாக இருக்கலாம். மன்னிகாமல் இருந்தால், நாம் அவர்களை மீது ஒரு வகையான அதிகாரத்தை வைத்திருக்கிறோம் என்று தவறுதலாக நினைக்க வைத்து நம்மை தந்திரமாக ஆட்கொண்டிருக்கிறான் பிசாசனவன். ஆனால் உண்மையில், மன்னிக்க மறுத்துவிட்டால், நாம் கடந்த காலத்துக்கு தொடர்ந்து உயிர் கொடுக்கிறோம் - நமக்கு எதிராகவும், நமக்கு எதிராக தவறு செய்தவர்களுக்கும் தொடர்ந்து தண்டணை கொடுத்து, நாம் அதற்கு அதிகாரம் கொடுக்கிறோம்.
தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் "நான் அவரை ______க்காக மன்னிக்க மாட்டேன் ," என்று சொல்லும் போதும் , நீங்கள் முன்பு அனுபவித்த வலியின் தருணத்தில் மீண்டும் வாழ்கிறீர்கள், உங்கள் நினைவகத்தில் அதன் முக்கிய இடத்தை வலுப்படுத்துகிறீர்கள். கடந்த காலத்தின் தவறுகளுக்கு அடிமைப்படுத்தப்படுவதற்கு இயேசு நமக்காக இறக்கவில்லை; அவர் நமது ஒவ்வொரு தவறுகளுக்காகவும் மற்றும் நமக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு தவருகளுக்காகவும் பாடுபட்டார், எனவே நாம் முழுமையாகவும் இலவசமாகவும் வாழ முடியும் என்று.
நம்முடைய பிதாக்களும் உட்பட நமக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னிக்க, முடிந்தவரை நாம் சிலுவையை கண்ணோக்கி பார்க்க வேண்டும். நமது பாவம் எவ்வளவு பெரியது என்பதை நாம் அறிந்திருக்கிறோம், அது எவ்வளவாக கடவுளுடைய மகனின் வாழ்வை பலியாக்கியது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்! நாம் இந்த ஏராளமான எதிர்பார்ப்பற்ற மன்னிப்பை பெற்றுள்ளோம் என அங்கீகரிக்கும் போது, நமது தகப்பன் உட்பட நமக்கு தீங்கு விளைவித்த எவருக்கும் அந்த மன்னிப்பை நாம் நீட்டித்து வழங்க முடியும்.
என்னை தவறாக எண்ணாதேயுங்கள். மன்னிப்பு என்பது, தவறான நடத்தையை புறக்கணிப்பதன் மூலம் அல்லது தீங்கு விளைவிக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் உங்களைத் நடத்துவதையோ, அல்லது பாவம் செய்ய ஒரு குருட்டுக் கண்ணோட்டத்தை நான் பதிவிடவில்லை. கடவுள் நமக்கு அதை செய்யவில்லை. மாறாக, அவர் தன் பாவமரியா மகன் மூலம் நமது தவறுகள் அனைத்தையும் மன்னித்து நன்மைக்காக நீதியை சமன் செய்தார்.
உங்கள் தந்தை இழைத்த ஒவ்வொரு தவறுக்கும் உள்ள முழு கோபமும் சிலுவையில் இயேசுவின் மேல் ஊற்றப்பட்டிருக்கிறது
நாம் இதை புரிந்துகொள்ளும்போது, நாம் மன்னிப்போம் மற்றும் அவர்களுக்கு மன்னிப்பை வழங்குவதில், நாம் உண்மையில் நமது பூமிக்குரிய தந்தையிடம் இருந்து பெறும் ஒரு ஆசீர்வாதம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த வழியில், நாம் தகுதியற்றவர்களுக்கும் இரக்கத்தை விரிவுபடுத்தி நற்செய்தியின் எடுத்துக்காட்டாக நாம் வாழலாம்.
உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து மன்னிப்பைக் கொடுக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். உங்கள் பூமிக்குரிய தகப்பனுக்கு மன்னிப்பு ஆசீர்வாதத்தை கொடுங்கள், உங்கள் பரலோகத் தகப்பன் உங்கள் ஒவ்வொரு தவறுகளுக்கும் மன்னிப்பளித்து சுதந்திரத்தில் நடக்கவும் செய்து, உங்கள் ஒவ்வொரு கண்ணீரையும் எப்போதும் துடைப்பார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
The Passion movement-ன் ஸ்தாபகரும் போதகருமான லூய் கிக்லியோ அவர்கள், தம் பிள்ளைகள் சுயாதீனத்தில் நடப்பதை விரும்பும் ஒரு நல்ல தகப்பனாகிய நம் தேவனுடைய குணத்தை புரிந்து கொள்வது பற்றி வாழ்வை மாற்றும் சத்தியங்களை 5 நாள் தியானமாக கொடுத்துள்ளார்.
More