விசுவாசம் தளரும் போது: சந்தேகத்தின் நிழலில் தேவனைக் கண்டடைய 10 நாட்கள்மாதிரி
இயேசுவின் முதல் சீடர்களைப் போல, உங்கள் சொந்த கதையை விட ஒரு பெரிய கதைக்கு நீங்கள் அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை ஒரு நோக்கத்துடன் துடிக்கிறது. அவரை அறிவதற்காகவும் பின்பற்றுவதற்காகவும் படைக்கப்பட்டிருக்கிரீர்கள். உங்கள் இருதயம் இதற்காக தான் ஏங்குகிறது. நாம் ஒவ்வொருவரும், ஆராதிப்பவரானாலும் சந்தேகப்படுபவரானாலும், பங்குப்பெற அழைக்கப்பட்டிருகிறோம்.
அவர் சீடர்களை அழைக்கிறார், அவர்கள் நம்பிக்கை அசராததுப் போல தென்படுகிறது. அவர்கள் எப்போதுமே நம்பிக்கையுள்ளவர்கள் போல தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் தாயின் கருவில் இருக்கும் போதே கிறிஸ்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்களோ? அப்போதிலிருந்து அவர்கள் தளரவில்லை என்பது போல் தெரியலாம். ஆனால் அவர் சந்தேகப்படுபவர்களையும் கூட அழைக்கிறார். . . . சொந்த விசுவாசம் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாமல், தேவனுடன் நெருங்கிய உறவுக்காக அசராமல் ஏங்குபவர்களைக் கூட அழைக்கிறார்.
இயேசு இரண்டு சாராரையும் வரவேற்கிறார். இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். இருவரும் அனுப்பப்பட்டுள்ளனர். அவர் துவங்கியுள்ள புரட்சிக்கு இரண்டு பேருமே அவசியமானவர்கள் தான்.
உங்கள் விசுவாச வாழ்க்கையில் நீங்கள் எங்கிருந்தாலும், உங்களையும் அவர் அழைக்கிறார்.
ஒருவேளை நீங்கள் வீட்டை விட்டு தூரமாக இருக்கலாம், என்ன நம்புகிறோம் என்றோ நம்புகிறோமா என்று கூட தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் சிந்தனையின் கட்டத்தைக் கடந்து சென்று, சந்தேகம் என்ற தரை வழியாக கடந்து சென்றுக்கொண்டிருக்கலாம், வாழ்க்கையின் மிகக் கடினமான கேள்விகளை எதிர்க்கொண்டிருக்கலாம். அல்லது நீங்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கலாம். தேவனுடன் உங்கள் உறவு முன்பு இருந்ததை விட வித்தியாசமாக, ஆனால் ஒரு விதத்தில் ஆழமானதாகவும் உயிருள்ளதாகவும், இருக்கலாம்.
நீங்கள் எங்கே இருந்தாலும், நீங்கள் தேவனைப் பற்றி என்ன யோசித்தாலும், உங்களுக்கு முன் பல வாய்ப்புகள் உள்ளன. இயேசு தன் சீடர்களிடம் முதலாவதாக சொன்னதாக பதிவிடப்பட்டிருக்கும் வார்த்தைகள், “என்னை பின்பற்றுங்கள்”, அவருடைய இறுதி வார்த்தைகளும் கிட்டத்தட்ட அந்த அர்த்தம் உடையது தான். முன் சென்றுக் கொண்டே இருங்கள். உண்மையை துரத்திக்கொண்டே இருங்கள்.
நாம் நம்பிக்கை இழந்துவிடுவதை விட பெரிய அபாயம் என்னவென்றால் ஒரு சாதாரண நம்பிக்கையில் பழகிப்போய் விடுவது தான். ஒவ்வொரு நாளும் கேட்க, தேட, தட்ட ஒரு வாய்ப்பு. இன்னும் ஆராய வேண்டியது அதிகம் உள்ளது. கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. உட்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. ஏற வேண்டிய மலைகள் உள்ளன, தாண்ட வேண்டிய சவால்கள் உள்ளன, காண வேண்டிய அழகிய காட்சிகள் உள்ளன, ரசிக்க வேண்டிய அழகு உள்ளது. அறிய வேண்டிய தேவன் இருக்கிறார்.
நீங்கள் இப்போது தான் துவங்கியிருக்கிறீர்கள்.
உங்கள் இதயம் தள்ளாடும் போது, உங்கள் முழங்கால் சோர்வடையும் போது, உங்கள் விசுவாசம் தளரும் போது, உங்களுக்கு இந்த நம்பிக்கை உண்டென்று நினைவில் கொள்ளுங்கள்:
இயேசு எல்லாவற்றிற்கும் மேலானவர்.
இன்னும் ஆழம் செல்ல வேண்டுமா? When Faith Fails என்ற டாமினிக்கின் புத்தகத்தில் சந்தேகம் மற்றும் விசுவாசத்தைப் பற்றி இன்னும் கண்டறியுங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
ஒருவர் விசுவாசத்தோடும் சந்தேகத்தோடும் போராடும்போது தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் உணரக்கூடும். சிலர் மெளனமாக கஷ்டங்களை சகிக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ சந்தேகம் விசுவாசத்தோடு பொருந்தாது என்று நினைத்து விசுவாசத்தையே கைவிட்டுவிடுகின்றனர். டோமினிக் டன் என்பவர் இது மிகவும் கவலைக்குரியது என்றும் மிக தவறானது என்றும் நம்புகிறார். கேள்வி கேட்பது இயல்பானது மாத்திரம் அல்ல, ஒரு வளமான மற்றும் திடமான விசுவாசத்திற்கு வழிவகுக்கக் கூடியது என்றும் வேதாகமத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சுட்டிக் காட்டுகிறார். இந்த 10-நாள் வாசிப்புத்திட்டத்தில் விசுவாசம் மற்றும் சந்தேகத்தைப் பற்றி ஆராயுங்கள்.
More