தேவன் + இலக்குகள்: ஒரு கிறிஸ்தவராக இலக்குகளை எவ்வாறு அமைப்பதுமாதிரி
நாள் 3: விசுவாசத்தினால் இயக்கப்படும் இலக்குகள் எவ்வாறு இருக்கும்?
தேவன் தலைமையிலான குறிக்கோள்கள் எப்படி இருக்கும்? உடல் வடிவம் பெறுவது அல்லது பள்ளிக்குச் செல்வது போன்ற ஊழியத்துடன் வெளிப்படையாக சம்பந்தமில்லாத ஒரு இலக்கை நீங்கள் கொண்டிருக்க முடியுமா? அல்லது, உங்கள் இலக்குகள் அனைத்தும் "மேலும் ஜெபிக்க வேண்டும்," "ஒரு தேவனுக்கான ஊழிய பயணத்திற்குச் செல்லுவதோ", " தேவாலயத்தில் சேவை செய்யவதாகவோ"? இருக்குமா?
வேதாகமத்தில் சில குறிக்கோள்களும் நடைமுறைகளும் ஏற்கனவே நமக்கு வகுக்கப்பட்டுள்ளன, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது: வசனத்தின் படி நம்மை காத்துக்கொள்வது (சங்கீதம் 119: 9), ஜெபத்தில் நேரத்தை செலவிடுவது (1 தெசலோனிக்கேயர் 5: 17-18), மற்ற விசுவாசிகளுடன் இருப்பது (எபிரெயர் 10: 25), உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளுவது (சங்கீதம் 96: 3) ஆகிய இவைகளே. தேவன் தம்மிடம் நாம் நெருக்கமாக இருக்கும்படி அவர் விரும்புகிறார், அதாவாது நம்மை பலனளிப்பவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் வைத்திருக்க வேண்டும் என்று. இது பின்பற்றுவதற்கான சரிபார்ப்பு பட்டியல் அல்ல, மாறாக தேவனுடைய கிருபையால் மாற்றப்பட்ட இதயத்தின் விளைவாகும். அவர் நம்மை மிகவும் நேசிப்பதால் இந்த விஷயங்களைச் செய்ய நாம் நிர்பந்திக்கப்படுகிறோம்.
ஆனால் வாழ்நாள் முழுவதும் எப்படி? அவருடைய மகிமைக்காக நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென தேவன் விரும்புகிறார்(1 கொரிந்தியர் 12:31) - நமக்காக அவர் வைத்திருக்கும் பெரிய குறிக்கோள்கள் சாதாரணமானவை என்று தோன்றலாம். இது ஒரு வியாபாரத்தை கட்டியெழுப்புவது, ஒரு பட்டப்படிப்பை முடிப்பது, குழந்தைகளை வளர்ப்பது, புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுப்பது, உங்கள் உடலை கவனித்துக்கொள்வது, அல்லது உங்கள் சலவை அனைத்தையும் செய்வது (ஆன்மீக சலவை? ஆம்!) ஆகிய இவை கூட இருக்கலாம்,ஆனால் இவற்றை நீங்கள் தேவனுக்கு பிரியமானபடி செய்யும்போது, நீங்கள் ஒரு வெளிச்சமாக அவற்றைப் பயன்படுத்தலாம். அந்த விஷயங்களில் அல்லது நம் முன்னேற்றத்தில் நம்முடைய அணுகுமுறைகளில் நாம் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல, நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே பிரதானம்.
அவருடைய மகிமைக்காக நாம் எல்லாவற்றையும் செய்யும்போது, மக்கள் நம்மில் வித்தியாசத்தை காண்கிறார்கள். நமது நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், ஆண்டவர் விரும்பினால், நம்முடைய கதையை பகிர்ந்து கொள்ள நமக்கு வாய்ப்பு அளிக்கிறார். எனவே, நமது குறிக்கோள்கள் அனைத்தும் தேவாலய பணிகள் மற்றும் தேவாலயத்திற்கு சேவை செய்வது பற்றியதாக தான் இருக்க வேண்டுமா? கர்த்தர் உங்களை எங்கு வைத்தாலும், நீங்கள் நடப்பட்ட இடத்தில் பூக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் போதே விசில் போடுங்ள், இவ்வுலகம் சார்ந்தவை கூட அர்த்தமுள்ளதாக மாறும்!
என்னுடன் ஜெபியுங்கள்அப்பா பிதாவே, நான் இருக்கும் இடத்திலேயே என்னை நட்டதற்கு நன்றி. ஆன்மீகக் கண்களால் நீங்கள் எனக்கு முன் வைத்த விஷயங்களில் நடவடிக்கை எடுக்க எனக்கு உதவுங்கள், அவற்றை என் வேலையைப் பொருட்படுத்தாமல் உமது தலைமையிலான குறிக்கோள்களாகப் பார்க்கிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் உம்மையே சுட்டிக்காட்ட உதவுங்கள். நான் குழப்பமடைந்து குறைந்துபோகும் நேரங்களில் கூட. குறிக்கோள்களில் நான் முன்னேறும்போது, உங்கள் கிருபை எனது பதாகையாக இருக்கட்டும், குறிகோல்கள் முழுமையைப் பற்றியது அல்ல என்பதை அறிந்து, அது என் நம்பிக்கையின் ஆசிரியரும் முழுமையுமானவர் ஆகிய உம்மை பற்றியது. இயேசுவின் பெயரில். ஆமென்!
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு கிறிஸ்தவராக நமக்காக ஒரு இலக்கை வைத்துக்கொள்வது சரியா? நமக்கு எப்படி தெரியும் அந்த இலக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது நமது ஆசையா என்று? சரி, கிறிஸ்தவ இலக்கு எப்படி இருக்கும்? இந்த 5 நாள் வாசிப்பு திட்டத்தில், வேதத்தை முற்றும் குடைந்து இந்த இலக்கை குறித்ததான பகுதியில் ஒரு தெளிவைப் பெற போகிறோம். அது மட்டுமல்லாது நமது திசையையும் அந்த கிருபையால் இயங்கும் இலக்கை நோக்கி திருப்ப போகிறோம்!
More