பளு அதிகம் இல்லாத பயணம் செய்மாதிரி
பளு அதிகம் இல்லாத பயணம் ஏன் செய்யவேண்டும்?
உண்மையில் ஏன் நாம் வாழ்ந்த வண்ணமே வாழ்ந்துகொண்டிருக்க கூடாது? ஏன் அவைகளை விட்டு பளு அதிகம் இல்லாத பயணம் செய்ய வேண்டும்?
ஏனென்றால் நாம் விடுதலையாக வாழவே விடுவிக்கப்பட்டோம்.
ஏனென்றால் திருமணம் ஒரு வாழ்நாளுக்கான பொறுப்பு.
ஏனென்றால் நம்முடைய பிள்ளைகளில் அநேகர் நாளை பெற்றோராய் இருப்பார்கள்.
ஏனென்றால் அனைத்தையும் சிருஷ்டித்தவர் நம்முடைய வழிகாட்டியாய் இருக்கிறார்.
ஏனென்றால் எதுவுமே நம்முடையதல்ல.
ஏனென்றால் மற்றவர்களும் நம்மைப்போல காயப்பட்டு சுகமாகி கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் அவர் நம்மை முதலாவது மன்னித்தார்.
ஏனென்றால் வெட்கம் என்பது ஒரு போலியான ஒன்று.
ஏனென்றால் நம்மிடம் போதுமானது உள்ளது.
ஏனென்றால் அவர் போதுமானவர்.
ஏனென்றால் இது அதிக சுவாரசியமானது.
ஏனென்றால் தேவன் நம்மை அடுத்த சாகசத்திற்கு அழைக்கும்போது ஆம் என்று சொல்ல இன்னும் எளிமையாக இருக்கும்.
ஏனென்றால் நித்தியம் என்பது நீண்டதூர பிரயாணம்.
ஏனென்றால் இயேசு பிறந்தார்.
ஏனென்றால் இயேசு இதற்காகவே மரித்தார்.
ஏனென்றால் இயேசு உயிர்த்தெழுந்து எல்லோரிடமும் நற்செய்தியை சுமந்து செல்லும்படி நமக்கு அறிவுறுத்தினார்!
பளு அதிகம் இல்லாத பயணம் ஏனென்றால் - இயேசு
ஜெபம்: சரி ஆண்டவரே, நாம் இதை செய்வோம். மற்றதை விட்டுவிட எனக்கு பெலத்தாரும். நீர் என் ஜீவியத்தின் தலைவராக இருக்க நான் விரும்புகிறேன். எல்லாவற்றையும் உம்மில் நான் நம்புகிறேன். ஆமென்.
அழுத்தத்தை விட்டுவிட்டு தேவனை நம்புவதர்க்கு இன்னும் அதிக குறிப்புகள்.
இந்த திட்டத்தைப் பற்றி
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.
More