கோபத்தைக் கைவிடுதல்மாதிரி

கோபத்தைக் கைவிடுதல்

5 ல் 4 நாள்

கோபத்தைக் கையாளுதல்

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; எபேசியர் 4:26

நான் என் சிநேகிதியோடு உணவருந்தும் போது தன் குடும்ப நபர் ஒருவரினால் தான் எத்தனை வெறுப்படைந்திருக்கிறேன் என வெளிப்படுத்தினாள். அந்த நபர் தன்னை எரிச்சலூட்டும் வகையில் புறக்கணிப்பதையும் அல்லது கேலி செய்வதையும், அவனிடம் நேரடியாக இப்பிரச்சனையை குறித்து சந்திக்க முயலும்போது அவன் ஏளனமான வார்த்தைகளால் பதிலளித்ததையும் அவன் மீதுள்ள கோபத்தால் வெடித்தாள். இருவரும் ஒருவரையொருவர் குற்றப்படுத்த, அக்குடும்பத்தின் பிளவு அதிகமானது.

நானும் முன்பு கோபத்தில் இதைப் போன்றுதான் இருந்தேன். நானும் எதிர்நோக்குகின்ற மக்களோடு கடினமான நேரங்களைச் சந்தித்தேன். ஒரு நண்பரோ, உறவினரோ ஏதாவது சொன்னால் அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்கள் என்பதை உடனே அடக்கிவிட்டு வேறொரு அர்த்தத்தைக் கொண்டுவந்து சிறிது நேரத்தில் கோபத்தில் வெடிப்பேன்.

இதனால் தான் பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 4:26ல் “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” என்கிறார். கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். தவறான, காரியங்கள் மீது உங்கள் சிந்தனையைச் செலுத்தாதீர்கள் அது கசப்பிற்கு வழிவிடுக்கும் தேவனின் உதவியை நாடுங்கள். “பொய்யைக் களைந்து அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக கடவன்” (எபே. 4:25).

யாரிடமாவது உனக்கு பிரச்சனையுண்டா? அதனைத் தீர்த்துக் கொள்வதை விட்டு முதலில் அதை தேவனிடம் விட்டு விடுங்கள். அவர் கோபத்தீயை தன்னுடைய வல்லமையுள்ள மன்னிப்பினாலும், அன்பினாலும் தணிப்பார்.

கோபத்தீயை, அது கட்டுக்கடங்காமல் பற்றியெரியுமுன் அணைத்து விடு.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

கோபத்தைக் கைவிடுதல்

கோபம் ஒரு சக்திவாய்ந்த உணர்ச்சி ஆகும்; அது அன்பும் ஆக்கப்பூர்வமானதாகவும் அமையலாம், அல்லது சுயநலமும் அழிவுக்கு வழிவகுப்பதாகவும் அமையலாம். இந்த 5 சிந்தனைகளை வாசிப்பதன் மூலம், உங்கள் கோபத்தை கர்த்தரிடம் ஒப்புவிப்பதைக் குறித்து அதிகம் அறியலாம். 

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக இந்தியா எங்கள் தினசரி ரொட்டிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு, செல்க:
https://tamil-odb.org/subscription/india/?utm_source=YouVersion&utm_campaign=Anger