புறங்கூறுதல்மாதிரி
கட்டற்ற உதடுகள் கப்பல்களை கவிழ்க்க கூடும். நாவால் கெடும். ஓட்டை வாய். உங்கள் வாயையும் நீங்கள் சொல்லும் காரியங்களையும் கட்டுப்படுத்தாமல் இருப்பதை குறிக்க இப்படிப்பட்ட பல சொற்றொடர்கள் இருக்கின்றன. புறங்கூறுதல் அதிலிருந்து மாறுப்பட்டது அல்ல. முக்கியமாக நாம் காயப்பட்டவராக இருந்தால் நம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்கு எளிதான காரியங்களில் ஒன்று புறங்கூறுதல். புறங்கூறுதல் பற்றி இரண்டு அடிப்படை கொள்கைகள் உள்ளன: உங்களிடம் புறங்கூறுபவர்கள் உங்களை பற்றி புறங்கூறுவார்கள். நீங்கள் பிரச்சனைக்கு தீர்வு உடையவராக இல்லாவிட்டால் நீங்கள் பேச கூடாது. புறங்கூறுதல் பற்றி தேவன் உண்மையாகவே அக்கறையாக இருக்கிறாரா? நாம் என்ன சொல்கிறோம் என்று அவர் உண்மையாகவே கவலைப் படுகிறாரா? உங்கள் வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுகொள்ள தேவ வார்த்தையை பாருங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு கட்டி எழுப்பவும் தகர்க்கவும் வியக்கத்தக்க ஆற்றல் உள்ளது. புறங்கூறுதல் குறிப்பாக நஞ்சுள்ளது. எனவே உங்கள் வாழ்க்கையில் வார்த்தைகள் என்ன பங்கு வகிக்கின்றன? உயிர் கொடுக்கவா அல்லது மற்றவர்களை சிதைக்கவா? நம் வாயிலிருந்து வருவதை தேவன் மிக முக்கியமாக கருதுகிறார் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு உதவும். உங்களை அமைதிப்படுத்தி அவர் என்ன சொல்லவிருக்கிறார் என்று கவனியுங்கள்.
More
இந்த திட்டம் Life.Church ஆல் உருவாக்கப்பட்டது