விட்டுவிடாதீர்கள்மாதிரி

Don't Give Up

7 ல் 6 நாள்

நாள் 6 - விடாப்பிடியான விதவை

விடாப்பிடியான விதவை என்னை பல நேரங்களில் ஊக்குவித்து எனது பரீக்ஷைகளில் தொடர்ந்து செல்ல வைத்தார். எனது உறுதியும் விசுவாசமும் தோற்கும் படியாக இருக்கும் போது அவரது உறுதி மற்றும் விசுவாசத்தை நினைவில் கொள்வேன். நம்பிக்கை குறைய தொடங்குகையில் அவரது கதைதான் எனக்கு நம்பிக்கை தருகிறது.

இயேசு பகிர்ந்த உவமையில், ஒரு விதவை நியாயம் நாடுகிறார் அதை அவர் பரிவற்ற நீதிபதியிடம் எடுத்துச்செல்கிறார். முதலில் அவருக்கு -இதயத்தில் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் மீண்டும் மறுக்கிறார். ஆனால் அந்த விதவை விடுவதாய் இல்லை. நீதிபதியிடம் நியாயம் கேட்டு பல முறை முயன்ற பின், நீதிபதி அவரது வேண்டுகோளை நல்கிறார். ஏன்? ஏனெனில் அவரை அப்பெண் அப்படியேனும் தனியே விடுவார் என்பதால்!

Jஇயேசுபிரான் மேலும் இந்த பாடத்தை தொடர்கையில் ஒரு நியாயமற்ற நீதிபதி கூட ஒரு விதவையின் வேண்டுகோளை நல்கிறார், அதுவும் அவரை பற்றி எந்த விதமான இல்லாதவர் ஏனெனில் அவர் விடாபிடியாக இருந்தததால் மாத்திரமே, அப்படி எனில் தன்னிடம் தன் சொந்த குழந்தைகள் கொண்டுவரும் வேண்டுகோள்களுக்கு ஆண்டவர் மேலும் எந்த அளவுக்கு விடையளிப்பார்.

ஆண்டவர் நல்லவர் மேலும் அவர் நம்பிக்கையானவர். அவர் நியாயமானவர் மற்றும் அவரது மக்களின் வேண்டுதலை உண்மையாகவே செவிமடுப்பவர். உங்கள் வேண்டுதல் செவிட்டு காதுகளில் விழுவது போலும், அல்லது ஆண்டவர் மற்றோரை அக்கறை கொள்வதை போல் உங்களை பேணுவதில்லை என சில நேரங்களில் தோன்றும். அவை மிகவும் கடினமானவை நான் அங்கு இருந்துள்ளேன். ஆயினும் கைவிடாதீர்!

அவ்விதவை நியாயமற்ற நீதிபதியை எதிர்க்கையில் விட்டுவிடவில்லை. உங்களுக்கு முக்கியமானவற்றிக்காக நியாயமான ஆண்டவரை தொடந்து நாடுகையில் இதை நினைவில் கோண்டு உற்சாகம் பெறுங்கள். உங்களை அவர் நிச்சயம் கேட்கிறார். நீங்கள் விரும்பும் நேரத்திலோ அல்லது வகையிலோ அவர் பதில் அளிக்காமல் இருப்பினும், சரியான நேரத்தில் பரிபூரணமான வகையில் அவர் எப்போதுமே விடையளிப்பார்.

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Don't Give Up

நீங்கள் எப்போதாவது மிகவும் சோர்வாக அல்லது தோல்வியடைந்தது போல் உணர்ந்திருக்கிறீர்களா? விடாமுயற்சியுடன் இருப்பதற்கும் தொடர்ந்து முன்னேறுவதற்கும் வேதாகமம் ஊக்கமளிக்கிறது! இந்த 7 நாள் வாசிப்புத் திட்டம் முன்னோக்கிய பயணத்திற்கு உங்களைப் புதுப்பிக்கும்.

More

இந்தத் தியான திட்டத்தை வழங்கியமைக்காகப் ப்ரிட்டனி ரஸ்ட் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: http://www.brittanyrust.com