இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி
வழக்கத்துக்கு மாறான அன்பு பிறருடைய தேவைகளை எதிர்நோக்குகிறது:
அன்பு, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் பிரவேசித்து, குடியேறும்போது உங்களுக்கு கிடைக்கிற ஒரு ஈவு மட்டுமல்ல, அது ஒரு விதையும்கூட.. பெரும் அறுவடையைப் பெற நீங்கள் அந்த விதையை விதைக்க வேண்டும்.
பிறருக்கு நீங்கள் செய்கிறது, உங்களுக்கு செய்யப்படும் என்பது கிறிஸ்தவத்தில் மட்டுமல்ல, எல்லோர் மத்தியிலும் பரிச்சயமான ஒரு வழக்கச்சொல். தேவ அன்பினால் உந்தப்பட்டு வாழும் வாழ்க்கையின் கோட்பாடு அது. உங்களை சுற்றி உள்ளவர்களிடத்தில் நீங்கள் அன்பை விதைக்கும்போது, உங்களுடைய கற்பனைக்கும் மிஞ்சி தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று எதிர்பாருங்கள்.
உங்களுடைய சக்திக்கும் திராணிக்கும் ஏற்றவாறு கொடுக்கக்கூடாது என்பதை கிறிஸ்தவராகிய நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். பெற்றுக்கொள்ளுகிறவர்களின் பாத்திரத்தின் அளவு என்ன என்பதை தேவ ஆவியினால் புரிந்துணர்ந்து, அவர்களின் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு ஏற்ப கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் (2 இராஜாக்கள் 4:1-6,7).
உங்களால் முடியும் என்பதால், அன்றாடத் தேவைகளுக்கே கஷ்டப்படும் ஒருவனுக்கு ஆகாய விமானத்தை பரிசளிப்பது தகுதியான செயல் அல்ல. அவருக்கு என்ன தேவை என்பதையும், அவருடைய பெற்றுக்கொள்ளும் திராணியின் அளவு என்ன என்பதையும் நீங்கள் முதலாவது அறிந்துகொள்ள வேண்டும். கையில் குடுவையுடன் நிற்கும் ஒருவனுக்கு ஆசீர்வாதத்தை லாரியில் கொண்டுபோய் ஊற்றினால், ஆசீர்வாதமும் வீணாகும், அதைப் பெற்றுக்கொள்பவனும் அதில் மூழ்கிப்போய் விடுவான். அதுமட்டுமல்ல, கொடுக்கிரவனுடைய திராணியையும் அது பெலவீனப்படுத்தி, அவன் மேலும் விதைக்க முடியாமல் செய்து விடுகிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.