இவைகளில் அன்பே பிரதானம்மாதிரி
மன்னிப்பதும், கிறிஸ்துவைப் போல அன்புகூர்வதும் பலவீனமல்ல, அப்படி செய்வதுதான் பலம்! “நீ வேண்டாம்”, “உன்னை பிடிக்கவில்லை” என்று வெளிப்படையாக சொல்லும் மக்களிடம் நாம் வலுக்கட்டாயமாக நம்மைத் திணிக்க முயல்வது மன்னிப்பு ஆகாது. உங்களுக்கு விரோதமாக செய்யப்பட்ட அனைத்து காரியங்களையும் நபர்களையும் தேவன் ஏற்ற காலத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு, நம்மில் அன்புகூர்ந்து, நம்மை அழைத்த அவர் மூலமாக முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாக, நமக்குள் அவர் கொடுத்திருக்கும் தேவ அன்பை வெளிப்படுத்தி வாழ்வதுதான் உண்மையிலேயே மன்னிப்பாகும்.
தேவனுடைய பிள்ளைகளுக்குரிய உரிமைகளையும் சிலாக்கியங்களையும் பயன்படுத்தாமல், சாதாரணமான ஒரு வாழ்க்கைவாழ்ந்து, தோல்வியடைந்து, காலத்திற்கு முன்னரே மரித்த மக்கள் ஏராளம். அவர்கள் ஒவ்வொரு நாளும் முறுமுறுத்து, சண்டையிட்டு, கசந்துகொண்டு, ஒருவித வெறுப்புடன் வாழ்ந்து வந்தவர்கள். தங்களை நோகடித்தவர்களை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தைக் கெடுக்க இடங்கொடுத்ததின் விளைவாக மனச்சோர்வும், கசப்பும் அவர்களுக்குள்ளாக வேரூன்றிவிட்டது. தமது அன்பினால் குணமாக்குகிற தேவன், எதிரியினால் ஏற்படும் வடுக்களைக் காட்டிலும் மிகவும் மகிமையான, பெரிதான எதிர்காலத்தை கொடுக்கும்படி அதற்கான தரிசனத்தைக் கொண்டிருக்கிற தேவன் மீது தங்கள் கவனத்தை செலுத்தாமல், எதிரியையும் அவனால் ஏற்பட்ட காயங்களையும் மட்டுமே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய இருதயத்தில் மன்னிப்பின் ஆவி இல்லாததின் விளைவாக அவர்களுடைய மனம் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படுவது மட்டுமல்ல, சரீரமும் பாதிப்படைய ஆரம்பிக்கிறது. கடந்த காலத்தை மறந்து, தேவன் வைத்திருக்கும் மகிமையான எதிர்காலத்துக்குள் அவர்களால் பிரவேசிக்க முடிகிறதில்லை. எனவே வாழவேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. அவர்களுக்குள்ளாக இருந்த தேவ அன்புக்கு இணங்கி, கிறிஸ்துவுக்குள் வெற்றிகரமான வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒவ்வொரு நாளும் தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொண்டு, மற்றவர்களிடமும் சொல்லிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். காலத்திற்கு முன்பே அவர் ஓரம் ஒதுங்கி நிற்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை!
ஆனால் 1 கொரிந்தியர் 13:3, “அன்பு ஒருக்காலும் ஒழியாது-மறையாது, பழமையாய் போகாது, முடிவுக்கு வராது” என்று கூறகிறது. அகாபே அன்பில் வாழ்ந்தால், நீங்கள் ஒருநாளும் தோல்வியடைய மாட்டீர்கள். உங்கள் விசுவாசம் ஒருநாளும் ஒழியாது. உங்களுடைய நம்பிக்கை பசுமையானதாக, உயிருள்ளதாக உங்களுக்குள் எப்போதும் இருக்கும். பவுல் தொடர்ந்து, தீர்க்கதரிசனங்கள் ஒழிந்துபோகும், அந்நியபாஷைகள் ஓய்ந்து போகும், அறிவும் குறைந்துபோகும் என்று கூறுகிறார்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அகாபே அன்பு ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும், ஒழிவதில்லை! அல்லேலூயா!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்தவத்தில் இருப்பது இயேசு அறிமுகப்படுத்திய புதுவகையான அன்பு – அகாபே அன்பு. வெறுமையான, பாவம் நிறைந்த உலகத்தில் இயேசு இந்த அன்பை அறிமுகப்படுத்தினார்.
More
இந்த திட்டத்தை உருவாக்கியதற்காக Christ Chapel Chennai க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://christchapel.in/ க்கு செல்லவும்.