பதட்டம்
மனநலமும் உடல்நலமும் எப்படித் தொடர்புடையவை?
விஞ்ஞானபூர்வமாக மனநலத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை என்பதை நாம் பலரும் அறிந்திருப்போம். இதைப்பற்றி நம் ஆண்டவர் வேதாகமத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை இந்த திட்டத்தில் ஆராய்ந்து பார்ப்போம். வாருங்கள்.
கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்
ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.
மனதின் போர்களம்
ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
சமாதானத்தை கண்டுக்கொள்வோம்
உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தரின் வல்லமையையும் பிரசன்னத்தையும் அனுபவித்தல்
நீங்கள் வேதனைப்படும் போது கர்த்தர் எங்கே இருக்கிறார்? நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அவரை அனுபவிப்பது எப்படி? குழப்பத்தையும் பயத்தையும் அவர் தெளிவாகவும் சமாதானமாகவும் அவர் எப்படி மாற்றுகிறார்? சங்கீதங்களில் பல பிரச்சனைகளில் துவங்கி கர்த்தரின் பிரசன்னம், வல்லமை மற்றும் வழங்கலில் முடிகின்றன. அவற்றின் சத்தியங்களைக் கற்று, அவற்றின் உதாரணங்களைப் பின்பற்றுவதன் மூலம், நமக்கும் அதைப் போன்ற சாட்சிகள் கிடைக்கின்றன. எப்போது அதிகம் தேவையாக இருக்கிறதோ அப்போது கர்த்தரைக் கண்டு கொள்வோம்.
அமைதியின்மை
"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.
கவலையை அதன் குகையிலேயே தோற்கடித்தல்
கவலை என்பது அதன் எல்லா வடிவங்களிலும் நம்மை பலகீனமாக்கிவிடக் கூடியது. அது நம்மைத் தடுமாறச் செய்து பயத்திலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடக்கூடியது. ஆனாலும் இதுவே கதையின் முடிவு அல்ல. இயேசுவில் நாம் சுதந்தரத்தையும், கிருபையையும் பெற்றுக் கொண்டு போராட்டங்களை மேற்கொள்ள முடியும். நாம் அதை வெற்றி கொள்வது மட்டுமல்ல, அதன் மூலமாக இன்னும் சிறப்பானவர்களாக மாற முடியும்.
தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்
ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக இல்லை என்று நீங்கள் விரக்தியடைகிறீர்களா? உங்கள் டூ-டூ பட்டியலில் உள்ள திட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது? சோர்வில் சோர்வடைந்து தேவனுடைய வார்த்தையை உங்கள் நண்பர்களிடமும் குடும்பத்துடனும் செலவழிக்க போதுமான நேரம் இல்லாததா? இவை உலகில் மிகவும் பொதுவான போராட்டங்களாக இருக்கலாம். நல்ல செய்தி என்னவென்றால் நம் காலத்தை நிர்வகிப்பதற்கு தெளிவான நியமங்களை வேதாகம் நமக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் அந்த வேதவாக்கியங்களின் முலம் வெளிப்படுத்தி, இந்த வாழ்க்கையின் மிதமுள்ள நேரத்தை எப்படி செலவழிப்பது என்பதற்கான தரமான நடைமுறை ஆலோசனையை உங்களுக்குக் கொடுக்கும்!
எனக்குத் தேவையான அனைத்தும்
தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும்.