உன்னதப்பாட்டு 7:10-12
உன்னதப்பாட்டு 7:10-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நான் என் காதலருக்கே உரியவள், அவரின் ஆசை என்மேலேயே உள்ளது. அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய், நம் இரவைக் கிராமங்களில் கழிப்போம். அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; அங்கே திராட்சை துளிர்த்திருக்கிறதா என்றும், அவைகளின் மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா என்றும், மாதளஞ்செடிகள் பூத்திருக்கிறதா என்றும் பார்ப்போம். அங்கே என் காதலைப் பொழிவேன்.
உன்னதப்பாட்டு 7:10-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நான் என் நேசருடையவள், அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது. வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம். அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.
உன்னதப்பாட்டு 7:10-12 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் என் நேசருக்கு உரியவள். அவருக்கு நான் தேவை. என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம். அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம். திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம். மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம். அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.
உன்னதப்பாட்டு 7:10-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது. வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம். அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.