சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:10-12
சாலொமோனின் உன்னதப்பாட்டு 7:10-12 TAERV
நான் என் நேசருக்கு உரியவள். அவருக்கு நான் தேவை. என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம். அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம். திராட்சைக் கொடிகள் பூப்பதைப் பார்ப்போம். மாதளஞ் செடிகள் பூத்ததையும் பார்ப்போம். அங்கே என் நேசத்தை உமக்குத் தருவேன்.