சங்கீதம் 2:5-12

சங்கீதம் 2:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து, தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது: “நான் எனது அரசனை என் பரிசுத்த மலையாகிய சீயோனில் அமர்த்தியிருக்கிறேன்.” நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்: அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன். என்னிடம் கேளும், நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன், பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன். நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்; மண்பாண்டத்தை உடைப்பதுபோல், நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.” ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள். பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள். இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்; நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும். அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

சங்கீதம் 2:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார். நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார். தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்; என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள். பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள். தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, தேவனை முத்தம்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

சங்கீதம் 2:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி, “நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்! அவன் சீயோன் மலையில் அரசாளுவான். சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார். அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும். இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனக்கு குமாரன். நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்! இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார். எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.

சங்கீதம் 2:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன். என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இரும்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.