சங்கீத புத்தகம் 2:5-12

சங்கீத புத்தகம் 2:5-12 TAERV

தேவன் கோபமடைந்து அந்த ஜனங்களை நோக்கி, “நான் இம்மனிதனை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தேன்! அவன் சீயோன் மலையில் அரசாளுவான். சீயோன் என்னுடைய பரிசுத்த மலை” என்கிறார். அது மற்ற தலைவர்களை பயமுறுத்தும். இப்போது கர்த்தருடைய உடன்படிக்கையை உனக்குக் கூறுவேன். கர்த்தர் என்னிடம், “இன்று நான் உனக்குத் தந்தையானேன்! நீ எனக்கு குமாரன். நீ என்னைக் கேட்டால், நான் உனக்குத் தேசங்களையெல்லாம் கொடுப்பேன். பூமியின் ஜனங்களெல்லாம் உன்னுடையவர்களாவார்கள்! இரும்புத் தடியால் மண்குடத்தை உடைப்பதைப்போல நீ அத்தேசங்களை அழிக்கமுடியும்” என்றார். எனவே ராஜாக்களே, ஞானமுள்ளவர்களாய் இருங்கள். அரசாளுபவர்களே, இப்பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். மிகுந்த அச்சத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள். தேவனுடைய குமாரனுக்கு நீங்கள் உண்மையானவர்கள் என்பதைக் காட்டுங்கள், நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் ஆண்டவர் உங்களை அழிக்க தன் கோபத்தைக் காட்டத் தயாராக இருக்கிறார். கர்த்தரை நம்பும் ஜனங்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் மற்ற ஜனங்கள் கவனமாக இருக்கவேண்டும். கர்த்தர் தமது கோபத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார்.