சங்கீதம் 150:3-6
சங்கீதம் 150:3-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
சங்கீதம் 150:3-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
சங்கீதம் 150:3-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
சங்கீதம் 150:3-6 பரிசுத்த பைபிள் (TAERV)
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்! தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்! நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்! ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்! பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்! எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!