ஆதியாகமம் 5:1-24

ஆதியாகமம் 5:1-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார். ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான். சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான். சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான். கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான். மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான். யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான். ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான். மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான். ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.

ஆதியாகமம் 5:1-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான். சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான். கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான். யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

ஆதியாகமம் 5:1-24 பரிசுத்த பைபிள் (TAERV)

இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார். தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார். ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு குமாரன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்கு சேத் என்று பெயர் வைத்தான். சேத் பிறந்த பிறகும் ஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். எனவே ஆதாம் மொத்தமாக 930 ஆண்டுகள் வாழ்ந்து, மரணமடைந்தான். சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற குமாரன் பிறந்தான். ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான். ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்கு கேனான் என்ற குமாரன் பிறந்தான். கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான். கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற குமாரன் பிறந்தான். மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற குமாரன் பிறந்தான். யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர். மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற குமாரன் பிறந்தான். ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர். யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற குமாரன் பிறந்தான். மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான். ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

ஆதியாகமம் 5:1-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான். சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான். சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான். ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான். ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம், அவன் மரித்தான். கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான். கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான். மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான். மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான். யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான். யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான். ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்ற பின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.