ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார். அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார். ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான். சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான். சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான். கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான். மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான். யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான். ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான். மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான். ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் ஆதியாகமம் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆதியாகமம் 5:1-24
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்