2 கொரிந்தியர் 4:7-10

2 கொரிந்தியர் 4:7-10 TAOVBSI

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 கொரிந்தியர் 4:7-10

அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல் 2 கொரிந்தியர் 4:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

அநித்தியத்தில் நித்தியத்தின் நிழல்

3 நாட்கள்

அநித்தியமான உலகில் நமக்கு அனுமதிக்கப்படும் நல் அனுபவங்களை சுமப்பதால் நித்தியத்தின் சாயல் பெறுகிறோம். பெறுகிற அனுபவங்கள் நம் வாழ்வில் நெறிமுறை கற்றுத்தருகிறது. நடை பெறும் சம்பவங்கள் நீண்ட எதிர்பார்ப்பையும் நல் நம்பிக்கையும் அருளுகிறது. நம்மை நெறிப்படுத்தும் மறை நூல் எழுத்துக்கள் நன்மை தீமை அறிய நம்முள் அழுத்தம் தருகின்றது. நமது இதயத்துள் குடி கொள்ளும் ஆவியின் பிரமாணமே தீமையிலிருந்து நம்மை விடுவித்து நன்மை பக்கம் நிற்க பெலன் தருகிறது. அடிக்கடி மன உளைச்சலால் குலைந்து போகும் நம்பிக்கை கடவுள் நமக்குள் அருளும் தீபத்தால் ஒளியாய் நம்முள் அணையா விளக்காய் மாறுகிறது. அடுத்தவரின் விளக்கை ஏற்றவும் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நித்திய நோக்கத்தை பற்றி வாழ தேவ ஆவியானவர் பெலன் செய்கிறார். இந்த அனுபவமே நம்முள் வளரும் நித்தியத்தின் நிழல்.