தீத்து 3:4-7

தீத்து 3:4-7 TRV

ஆனால் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் கருணையும் வெளிப்பட்டபோது நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அன்றி, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் நம்மை மீட்டெடுத்தார். மறுபிறப்பின் கழுவப்படுதல் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுப்பித்தல் மூலமாகவுமே அவர் நம்மை மீட்டார். அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய மீட்பரான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் அவர் நம்மீது நிறைவாக ஊற்றினார். ஆகவே அவருடைய கிருபையின் மூலமாய் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டு, நித்திய வாழ்வு என்ற எதிர்பார்ப்பை சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்கின்ற அவருடைய வாரிசுகளாக வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தார்.