எபேசியர் 4:11-13

எபேசியர் 4:11-13 TRV

அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை இறைவாக்கினர்களாகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், இறை ஆசிரியர்களாகவும் திருச்சபைக்கு ஒப்புவித்தார். ஏனெனில், ஊழியத்தின் பணிகளைச் செய்வதற்கு இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதன் ஊடாக, கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையைக் கட்டியெழுப்புவதே அவரது நோக்கமாயிருந்தது. இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப் பற்றிய அறிவிலும் விசுவாசத்திலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவைப் பெற்ற முதிர்ச்சியடைந்த மனிதராக வேண்டும் என்பதே அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.