கொலோசேயர் முன்னுரை
முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கொலோசே பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. அவர் ரோம் நகரத்தில் சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்தே இதை எழுதினார். அவர் கொலோசே பட்டணத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை. அவர் தமது இரண்டாவது ஊழியப் பயணத்தின்போது, எபேசு பட்டணத்தில் இருந்த காலத்தில் கொலோசே பட்டணத்து விசுவாசிகளைக் குறித்து அறிய நேரிட்டது. அந்தத் திருச்சபைக்குள் யூதரல்லாதவர்களின் சில விசித்திரமான தத்துவங்கள் நுழைந்து கொண்டன. இந்த தவறான பிழையான நம்பிக்கையைத் திருத்துவதற்காகவும், கிறிஸ்து வேறு யாருமல்ல, அவர் இறைவனே என்று காண்பிப்பதற்காகவுமே அவர் இதை எழுதினார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
கொலோசேயர் முன்னுரை: TRV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.