அப்போஸ்தலருடைய நடபடிகள் உள்ளடக்கம்

உள்ளடக்கம்
இப்புத்தகம் பவுலுடன் ஊழியத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர் லூக்காவினால் எழுதப்பட்டது. கி.பி. 65 ஆம் ஆண்டிலிருந்து 70 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இதை எழுதினார். லூக்கா தன்னுடைய நற்செய்திப் புத்தகத்தின் தொடர்ச்சியாகவே அப்போஸ்தலர் நடபடிகள் என்ற புத்தகத்தை எழுதினார். இப்புத்தகத்தில் ஏறக்குறைய கி.பி. 65 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சம்பவங்கள் அடங்கியுள்ளன. இயேசு தாம் பூமியில் செய்யத் தொடங்கியதை தமது திருச்சபையின் மூலமாகத் தொடர்ந்தும் செய்கின்றார் என்பதை அவர் எடுத்துக் காட்டுகிறார். யூதர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து யூதரல்லாதவர்கள் வாழ்ந்த பகுதிக்கு நற்செய்தி எவ்வாறு பரவியது என்பதைக் காட்டுவதற்காகவே இப்புத்தகம் எழுதப்பட்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

அப்போஸ்தலருடைய நடபடிகள் உள்ளடக்கம்: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்