3 யோவான் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 85 ஆம் ஆண்டிலிருந்து 96 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலனாகிய யோவானால் எழுதப்பட்டது. அவர் இதை எபேசுவிலிருந்து எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. உண்மையைப் பிரசங்கிக்கின்ற நற்செய்திப் பணியாளர்கள் வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்குடன், தமது நண்பனாகிய காயுவுக்குக் இக்கடிதத்தை எழுதினார். அவ்விதமாய் உதவி செய்ய மறுக்கும் தியோத்திரேப்பு போன்ற மனிதரைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்கின்றார். கிறிஸ்துவின் பணியில் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

3 யோவான் முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்