2 கொரி 12:6-7

2 கொரி 12:6-7 TRV

அப்படி நான் பெருமையாகப் பேசினாலும் அது மடைமையாய் இருக்காது. ஏனெனில் நான் சொல்வது உண்மை. ஆனால் நான் அப்படி பேசப் போவதில்லை. மற்றவர்கள் என்னில் பார்க்கின்றதற்கும் கேட்கின்றதற்கும் மேலாக என்னைக் குறித்து அவர்கள் பெரிதாக எண்ணி விடாமல் இருக்க நான் அப்படி செய்யப் போவதில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட அதிமேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, நான் அகந்தைகொள்ளாதபடி, எனது உடலில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னை கொடுமைப்படுத்தும் சாத்தானின் தூதுவனாயிருக்கிறது.