1 பேதுரு முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 63–64 வரையுள்ள காலத்தில் அப்போஸ்தலனாகிய பேதுருவினால் எழுதப்பட்டது. பல இடங்களில் சிதறிப்போயிருந்த விசுவாசிகளை உற்சாகப்படுத்துவதற்காக, அவர் இந்தக் கடிதத்தை எழுதினார். துன்பங்கள் அனுபவிப்பது கிறிஸ்தவ வாழ்வின் ஒரு பங்கு என்பதையும், துன்புறும் விசுவாசிகளுக்கு இறைவன் அழிந்து போகாத வெகுமதிகளைக் கொடுப்பார் என்பதையும் அவர் இங்கு குறிப்பிடுகிறார். விசுவாசிகள் துன்பங்களின் மூலமாக வெற்றியையே பெறுவார்கள். ஆதலால் நாம் கர்த்தரில் நம்பிக்கை உள்ளவர்களாய் நம்முடைய நிரந்தர வீடு பரலோகத்திலேயிருக்கிறது என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என்பதை இக்கடிதம் வலியுறுத்துகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 பேதுரு முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்