1 கொரிந்தியர் முன்னுரை

முன்னுரை
அப்போஸ்தலனாகிய பவுல் கி.பி. 50 ஆம் ஆண்டுக்கும் 52 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தனது இரண்டாவது நற்செய்தி பயணத்தின்போது, கொரிந்து பட்டணத்தில் திருச்சபையை நிறுவினார். பவுல் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அங்கு இருந்தார். பின்பு அவர் எபேசு பட்டணத்தில் இருந்தபோது, கி.பி. 56 ஆம் வருடக் கடைசியில் இந்தத் திருச்சபையிலுள்ள பல பிரச்சினைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, இதை எழுதினார்.
அந்தத் திருச்சபையின் சில விசுவாசிகளிடமிருந்து பவுலுக்கு ஒரு கடிதமும் வந்திருந்தது. அதில் பலதரப்பட்ட பிரச்சினைகளை எப்படித் தீர்த்து வைப்பது எனக் கேட்டு எழுதப்பட்டிருந்தது. அதற்கான பதில்களை பவுல் இக்கடிதத்தில் எழுதுகிறார்.
நாம் விசுவாசிகள் என்று சொல்வது மட்டும் போதாது, நாம் விசுவாசிகளாக வாழ வேண்டும் என்பதையே இக்கடிதம் வலியுறுத்துகிறது. அத்துடன் நம்முடைய நடத்தை தொடர்ச்சியாக பரிசுத்தத்தில் வளர்ச்சியடையும் ஒன்று என்பதையும், திருச்சபையில் விசுவாசிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

1 கொரிந்தியர் முன்னுரை: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்